பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

டேவிட் கூக்லித்னோவ் கால்மைசியா,

உருசியக் கூட்டரசு (பி. 1922)

கங்குற் கனவுகளில் நண்பனைக் கண்டேன்நான்; இங்குஎன் உளந்தொட்டான்; ஏகினான் - பின்அங்குக் காலம் எனும் யாழ்நரம்பு கல்என்று அதிர்ந்ததுவே, மேல்விரைந்து பாடும் இனி.

துடிக்கின்ற நெஞ்சைத் தொடுகின்றேன் கையால்; துடிப்பதென்ன ? தோன்றாஎன் பாட்டா ?-வெடிப்புறவே கூர்அலகால் இல்லாமை யாம்ஒட்டைக் குத்திடுதே ஆர்வமாய் மேலே வரற்கு.

விரைந்தோடும் உயர்குதிரைக் கடிவா ளத்தை விட்டதுபோல் வீச்சொன்றில் என்றன் எல்லா நிரைஉறுதிப் பாடெல்லாம் வீணா வாகி நேராக நல்லறிவை மீறிப் பாயும்.

99