பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மிகையில் லுக்கோனின் உருசியக் கூட்டரசு

(19. 1918)


வகுத்தவாழ் வெல்லையின் மிகுதிக் குப்பின் வாழ்வதில் இன்பமே, சூழ்ந்திடும் துன்பமும். குருட்டுத் தனமாய்க் குண்டொன்று நெருப்பாய்ச் சுருக்கெனத் தைக்கையில் எழும்மண் னோசைகள் முழுமையும் மறந்து, சுருள்வில் போல் நான் உருண்டுபுரண் டெழுந்தேன். பின்னும்அங் கிருந்த தென்ன?

இஃதே

அக்கணத் திருந்து

மீண்டும் நாற்பத் தொன்றில் வாழ்கின் றேன்.நான், வாழ்கின் றேன்.நான், வாய்ப்பொன் றேன்னைப் பாதுகாத் திட்டது. முன்னர்தான் கொண்ட பற்றையும் பற்றிலாத் தன்மையும் அற்றைநாள் இருந்து காலத்தால் கணித்துச் சாலத்தீர்ப் பிடுவேன். வாழ்கின் றேன்.நான், வாழ்வுபொய் யாயினும் வாழ்கின் றேன்.நான்; நகர்கிறேன். ஆயினும் ஒய்ந்தி ருப்பதாய் உணர்ந்திடு கின்றேன்.

f 14