பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழியினும் கண்ணிர் போலது சாரல்

பொழிந்திடும் மகிழ்ச்சியின் துய்ப்பே. எழிலொடும் மகிழ்ச்சியின் முறுவலும் எய்தும்

இருண்டநீள் பூம்பொழில் யாவும் இழிந்தவிண் இடிபோல் ஒக்மரங் கள்தாம்

மோதியே அடங்கிடும் ஒலிகள்: செழித்தஒக் மரத்தின் ஈரித்த முடிகள்

சிலிர்த்திடும் மகிழ்ச்சியில் திளைத்தே.

புன்னை சூழ்ந்த சாலை

திரும்பிப் பார்எனை! நான் இங் கிருக்கிறேன். ஒருவர்க் கொருவர் தேவையா னவர்நாம். கொடும்புயல் காற்றால் கிழிந்து உலர்ந்த கொடியை உனக்குமே லாய்என் நினைவுயர்த் தட்டும். சாலையே, புன்னைகள் சூழ்ந்த என்றன் சாலையே!

வீரனின் துணிவும் தீரமும் உனக்குநான் கொணர்வேன். ஆயினும் வறண்டு நீரிலாக் கண்களில் உன்துணி வுண்டு.

பொறுத்தற்கு இயலா இடுக்கண் களைநான் உனக்குஎனக் கொணர்வேன்; ஆனால் நீயோ அவற்றினும் மிஞ்சிய அனல் துயர் கொண்டுளாய். வெறியனல் போரில் சொரிந்த எண்ணிலா வெடிகுண்டு களாலும், கொடியவர் சூழ்ந்த அழிபோர்ப் புயலால் அரிக்கப் பட்டும், தீய்க்கப் பட்டும் திண்டு முண்டாய்

I 2 I