பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

பக்தியார் வகப்ஜாடே அசர்பைசான் (பி. 1925)

விரைவு

முன்புநான் பாக்குமப பருறது மாசுகோ மlசனறடவே முனைந்து விரைவு வண்டியில் ஏறின் மூன்றிரவும் முந்நாள் பகலும் ஆகும்; வேறு வழியில்லை. முற்படு கற்கள் தம்மை எண்ணிக் கழித்திடுவேன்.

இப்பொழு தோநான் பாக்கு-மாசுகோ வானூர்தி எண்ணும் மூன்று மணிக்குள் சென்று சேர்கின்றேன். தப்பாது உடனே இங்கே நானும் திரும்பிடுவேன், எனினும் அடடே, இன்னும் சலிப்பாய் இருக்கின்றேன்.

ஒளியின் விரைவில் நானும் பறக்க விழைகின்றேன். உள்ளம் செல்லும் விரைவைப் பார்த்தால் அதுகூட வெளியில் சும்மா தொங்குதல் போலும், சிறகு இரண்டும் விறைத்துக் கிடப்பது போலும் எனக்குத் தோன்றிடுமே.

என்றன் எண்ண விரைவுக் கேற்ப ஏன்நானும் பறத்தல் கூடாது? (இதுவெறுஞ் சவடால் பேச்சன்று.) இந்நூற் றாண்டின் மகன்நான்! இந்தப் பேரூழி எதிலும் போட்டி யிடும்உந் தாற்றல் உடையதுவே.

உயரே, உயரே விரைந்து விரைந்தே என்எண்ண உயர்வையும் மீறி ஓங்கிப் பறக்க விரும்புகிறேன்; அயர்வில் லாமல் என்னையும் முந்திச் சென்றிடவே.

2 28