பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறந்தி டுகநீர் சுணக்கம், கூச்சம் கொளவேண்டா. நான்புல் வெளியில், காடுகள் ஊடே நடக்கின்றேன் நடுங்கேன் பிறர்பெயர் கொண்டும் என்றும் செல்வதிலை; நான்நல் திறந்த மனத்துடன் நண்பரைக் காண்கின்றேன்; நானா வழியிலும் வெளிப்படை யாக இருக்கின்றேன். பல்வகை மாந்தரைச் சாலையி லேநான் சந்திப்பேன், பலர்க்கும் வாழ்த்துரை கொண்டவர் இல்லம் படர்ந்திடுவேன். பிரியும் போதும் மீண்டும் சொல்வேன்: ‘என்நெஞ்சம் கரவில் லாமல் உங்கட்கு என்றும் திறந்திருக்கும். ‘நெருங்கி வாரீர், மக்காள், நட்பில் நிலைத்திடுவோம்'; இணைந்தே நமது மகிழ்ச்சியை இனிதே துய்த்திடுவோம்; திறந்த நெஞ்சொடும் செப்புவேன்; எவர்க்கும் நல்வரவே. துறந்தி டுகநீர் சுணக்கம்; கூச்சம் கொளல்வேண்டா.

234