பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடைக ளேநீர் பதறாது செல்க!

முகில்காள் மெல்ல ஊர்ந்திடுவீர்;

நீடுறு வாழ்வே பற்பல துணுக்காய்

நீயும் பிரிந்து நிற்பாயே.

உன்றன் ஒவ்வோர் அணுவையும் தனியே

ஒதுக்கி எடுத்துநான் பார்க்கட்டும்

என்றன் நினைவில் உன்சிறப் பெல்லாம்

இனிதாய் வந்து பதியட்டும்.

மெய்மைகள், உணர்வுகள், செயல்கள், சிந்தனை

மேவும் சுவட்டைப் பதிக்கட்டும்

பொய்யாய் மங்கிப் போகாது அவற்றின் புதுமை என்றும் நிலைக்கட்டும்.

வாழ்நாள் குறைவே, அதனால் ஒருநாள்

வாழ்வில் பன்னிரண் டாண்டுகளை வீழ்நாள் படாமல் செறிவுறத் திணிக்கும் விதத்தை நாமும் கற்றிடுவோம்.

இனிய புலவ! இன்பப் பாடல்கள்

எழுதுமுன் வியர்வை சிந்திடுவாய், முனைந்து விரையேல், துரவலே! வாழ்வுநூல்

முடிக்க என்ன அவசரமே?

பகலே கழிக; இரவே செல்கநீ

ஆயினும் பளிச்சென மறையாதீர்......

நுகரப் பிறந்தேன்; ஆற அமர

நுகர்ந்து மகிழ்வேன் வாழ்வினையே.


விரிந்த இரவு வானத்தே

விண்மீன் ஒன்று பொலிந்தொளிரும்;

திரிந்த முத்தாய் ஒளிர்சாம்பல்

திகழும் முகில்கள் மலையடையும்......

24 7