பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரியைத் தார்க்கோல் கொண்டு முடுக்கிடேல்

பதறேல் ஏன் இவ் ஒட்டந்தான்?

அரிய பொழுதை ஆற அமரநான்

அழுந்தி நுகர விழைகின்றேன்.

குழந்தைப் பருவத் தோழா, நீயும்ஒர் வேட்கைக் காரன் பிறவியிலே!

பழந்துாங் கும்மலை நாடு முழுவதும்

பார்த்துத் துருவும் பாங்குடையாய்.

உவக்கும் புல்வெளி எங்கும் திரிவோம்

உடன்என் னோடும் நீவருவாய்.

சிவக்கும் நாணொடும் புல்லினுள் ஒளித்திடும்

செழுமை மலர்களை வாழ்த்திடுவோம்.

புல்லுள் மலரைப் பறிக்க எண்ணேன், வெட்டிப் போட ஒப்புகிலேன்:

சொல்இல் லாத அவற்றின் இன்மொழிப் பொருளை அறிய முயல்வேனே.

அவற்றின் பக்கம் மெதுவாய் நின்று.நான்

அன்பால் அவற்றை நோக்கிடுவேன்;

உவக்கும் இனிய ஒவ்வொன் றின்முகம் ஊன்றி நோக்கி மகிழ்வேனே.

விழித்தே அவையும் என்னை நோக்கிடும்

வியந்து பார்க்க நான் நிற்பேன்; கழியும் உயர்வாய் மெதுவாய்ச் சோம்பலில்

காலம்: எதற்குப் பரபரப்பே?

விரைந்து பறக்கக் காற்றா? நான்அட்

வீணாய்ப் பதற்றம் ஏன்இங்கே?

இருந்து மெல்ல ஆற அமர

எல்லாம் நுகர விழைவேனே.

24 6