பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

அலெக்சாண்டர் யாஷின் உருசியக் கூட்டரசு (1913-1968)

என் மனைவிக்கு என்மீது அன்பில்லை

என்மனை விக்கு என்மீது அன்பிலை...... என்பால் அவட்கு அன்பிலை என்று சின்னா ளாகவே ஐயம் உற்றேன்...... என்னா யிற்றது, சந்திக்கும் வேளையில் ஒப்பந்த மீறுகை என்றே கருதினேன்; அப்படி யேஅது நடந்து விட்டது. நிலைமை முன்பே கலகலத் திருந்தது, சுமைமேல் இதுவே கடைசித் துரும்பு; என்மனை விக்கு என்மீது அன்பிலை......

எப்படி இருப்பினும், என்ன தான்.இது? தீய நேர்வா? நன்னி மித்தமா? விடுதலை வாழ்வா? புதுப்பிணைப்பின் தொடக்கமா? போர்அறை கூவலா? சீரிணைப்பு நாளா? சூன் இருபத் திரண்டா? மே ஒன்பதா? வாழ்ந்துகொண் டிருக்கிறேன் ஒன்றும்புரி யாமல்; துயருற வேண்டுமா? அன்றிதை வெற்றியாகக் கொள்வதா?