பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புழுங்கிக் கிடப்பதா? விட்டது சனிஎன நன்றி சொல்வதா? என்னையும் அவளையும் நன்கு புரிந்திலேன். வாழ்வுச் சகடம் சிக்கிக் கொண்டது; இடம்பிடித் திருந்த பகைவரின் படைகள் திடுமென விட்டுச் சென்றஓர் களம்போல் அறையெலாம் என்ன தாறு மாறுகள்; கடந்த ஆண்டின் வேட்டைக் குப்பின் துடைக்கப் படாமல் கிடக்குதென் துமுக்கி; பணிச்சறுக்குப் பட்டையும் மூலையில் கிடந்திடும்; பணிநிறை நிலவோ, அணிதிகழ் காடோ நினைந்தெனை அழைப்பதும் இல்லை. பிரித்திடா மடல்கள் குவிந்துள மேசைமேல்; உழவுச்சால் இடையில் களைமுளைத் தல்போல் நூல்பேழை தூசியின் கால்பட்டு அழுந்தும். உண்டேனா இல்லையா? என்ன செய்கின்றேன்? கண்டது யார்கொல்?

முகத்தினை மழித்த நாள் எது? அறிகிலேன். எந்தப் பணியையும் செய்திட இயலேன்: உறங்கவும் இயலேன். மூச்சினை விடவும் முடிவ தில்லை. எழுதிட இயலேன். கடவுளே என்ன நடக்கிறது அறிவிநீ! உயர்கின் றேனா? அல்லது மயங்கி வீழ்கின் றேனா? நிலத்தை நோக்கியா? நிலத்தினுள் ளேயா? அல்லது ஒருகால் இதைத்தான் எடையற்ற நிலைஎனக் கூறுவர் போலும்! முன்பொரு காலம் என்சேம வைப்பில் உறுதியாய் இருந்தேன், முன்பணம் அளிக்க முடிந்தது. தாக்க முடிந்தது; என்நிலை யை நான் காக்க முடிந்தது.

250