பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருஞ் சொற்பொருள்

அகம்-வீடு; உள்ளம் அகவை-வயது அங்காடி-கடை அட்டி-தடை அடர்-நெருங்கும்; கூடும் அடவி-காடு அடைவு-மறைவு அண்டம்-புடவி: உலகம் அணித்து-அருகில் அதால்-அதனால் அமுதக் கொடி-திராட்சைக்

கொடி அயர்வு-சோர்வு அரண்-மதில்; கோட்டை அரணம்-கவிந்த செருப்பு:

அரத்தம் - குருதி: இரத்தம் அரவம்-ஒலி சப்தம் அருமந்த-அருமருந்தன்ன அரோரா-அக்டோபர்ப்

புரட்சி தொடங்க அறிவிப்பு வெடிப்பைத் தந்த கப்பல் அல்-இரவு அல்லா-கடவுள் அல்லிசைப்புள்-இரவில்

பாடும் பறவை அல-அல்ல அலக்கண்-துன்பம் அலகு-கூர்மை: முனை அவார்-தாகிஸ்தானில் வழங்கும் ஒரு மொழி

அள்ளுறல்-வாயூறல் அளறு-நரகம்; பாழிடம் அறிதுயில்-அரைத்துாக்கம் அறை கூவல்-சூளுரை:

சவால் ஆப்பிள்-ஒரு கனி வகை ஆலித்தல்-மேல் எழல் ஆவணம்-சாசனம்; பத்திரம் ஆழி-பெருங்கடல்; மோதிரம் ஆற்றல்-வல்லமை இசைப்பேழை-பியானோ இடத்தேர்வாளர்-பணிக்கான

இடம் தேர்பவர் இடர்-தொல்லை இடறாய்-தவறமாட்டாய் இடுக்கண்-துயர்; துன்பம் இணைவிழை அறை-மேலை நாட்டு ஆடவர் பெண்டிர் நடமிடும் இடம் இரண்டகம்-சூழ்ச்சி:

வஞ்சனை இரா-இரவு இருபால்-இரண்டு பக்கம் இரும்பொறி-மெஷின் இரைந்து-கூச்சலிட்டு இரோஷிமா-இரண்டாம்

உலகப்போரில் அழிவுற்ற ஜப்பான் நகர் இல்-வீடு: இல்லாத இவர்தல்-ஒட்டுதல்; சவாரி இறுகி-அழுந்தி

257