பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணுகிற உருப்பொலிவை ஏற்றுமிக நன்றாய்ப் பண்ணுகிற பணித்திரளின் பாங்கினைஎன் சொல்வோம்! மண்ணுகிற நின்உருவம் முகம் திரும்பும் போது நண்ணுகிற இன்னொளியை நான் நுகரு கின்றேன்.

கூட்டத்தினைப் புறந்தள்ளித் தன்.உறுதி யோடு தோட்டத்தினை நீத்திடுவோம், தோழமைமி குந்தோய்! வேட்கைமிகு குழந்தையென ஆருயிரே, நீதான் ஆட்டமிட என்றுமேநீ ஆவல்கொள்ளு வாயே.

அன்பனின்கை வண்ணமே! நின் அருமுயற்சி யோடும் ஒன்றிய அவ் உழைப்பினுக்கே உற்றபயன் ஈவாய்; தன்கையால் வண்ணமலர் தீட்டிஒரு குழந்தை முன்நின்று முகிழ்பரிசை முழுதும் அளிப் பாயே.