பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவினை நோக்கிப் பாடல்கள் தள்ளப் படும்பொழுதில் நாவை அடக்கிக் கைகட்டி நீஏன் மூச்சற்றாய்?

சிறைக்கோ அன்றிச் சதுக்கத் துக்கோ செலுத்தினரா? கறைநெஞ் சத்தார் பழத்தோட் டத்துள் கடத்திட்டார்.

வீறுட னேஅவன் விளைந்த பழங்கள் பறித்தபடி விசினன், அவையோ குட்டைகள் எங்கும் வீழ்ந்தனவே.

பொன்போல் பொலியும் பழங்கள் நீரில் நிலவொளியில் நின்று மிதந்தன, நீரின் அடியில் மூழ்கவில்லை.

ஒளிரும் துகள்களை விண்ணில் இருந்தவன் பறித்தானோ? வெளிரும் சாவில் வீழும் பாவலர் அதைச்செய்வார்.

குட்டைகள் வறளப் பழங்கள் சூம்பி வெம்பினவே இட்ட பாவலன் அடியின் சுவடுகள் அழிந்தனவே.

ஆயினும் படைஞர் சுவைநீர் அருந்தி இருக்கையிலே மேவிய பாவலன் பாடலை அன்றோ பாடினரே.

16