பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியங்களின் பெரும் உடன்பிறப்பாண்மை

நமது இலக்கிய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது மறக்கமுடியாத ஆயிரத்துத்தொள்ளாயிரத்து இருபதுகளுக்கு வருங்கால், ஒவ்வொன்றும் அப்போது எப்படிச் சீறிக் குமிழியிட்டு, ஒரு புரட்சியின் தன்மையில் இருந்தது என்பதைக் காண்கிறோம். இவ்வாண்டுகளில் இலக்கிய வாழ்வின் பல்வேறுபட்ட முன்னேற். றங்களுக்கு மேலாக, புரட்சிக்கு முன்பே தங்களை நிலைநாட்டிக் கொண்ட எழுத்தாளர்கள் இருந்ததோடு, அவர்கள் நம் நாட்டில் ம ட் டு ம ன் றி வெளிநாடுகளிலும் அறிமுகமாயிருந்தார்கள். அவர்களும் புதிய தலைமுறையினரும் உலகில் இதுவரை ஏற்படாத வகையில் புத்திலக்கியத்தைப் படைத்தனர்.

இவ்வெழுத்தாளர்களுள் த ைல ைம யான வர் மாக்சீம் கோர்க்கி. அவ்வாண்டுகளின் ஏடுகளையும் பிற வெளியீடுகளையும் காண்போர், அவர்களுள் பாவலர்கள் மாயாகோவஸ்கி, அக்மதோவா, மேண்டல்ஸ்டாம், .ெ ட மி யா ன் ஸிட்னி, பிரையூசோ, சுவெட்டயேவா, கினியூவேவ், எளிலினின் முதலியோர் இருந்தனர். அவர்கள் பல்வேறு அளவு அடிப்படையுடன் அக்டோபர்ப் புரட்சிபற்றியும், பெரிய சமுதாய மாறுதல்கள் ஏற்பட்டதைப்பற்றியும் எழுதினர். மற்றும் புது இலக்கிய ஆற்றல்கள், அவர்கள் குரல்கள் அப்போதும்கூட முழுமுதிர்ச்சி பெறாதவைபோல் ஒலித்தாலும் - தோன்றின.

நாம் குறிப்பிடத்தக்கது, தொடக்க முதல் நமது இலக்கியம் பல்தேசிய இலக்கியமாகவே வளர்ந்தது. சோவியத்து ஆற்றலின் தொடக்க ஆண்டுகளில் முன்னணியில் உருசியப் புரட்சிப் பாவலர் களாகிய விளாடிமிர் மாயக்கோவஸ்கி, உஸ்பெக் இலக்கியத்தில் டெமியான் ஸிட்னி, எடுத்துக்காட்டாகப் புரட்சிக் கவிஞர் ஹம்ஸா நியாஸி'(பே அண்ட் பார்ம்கோஸ்ட் எழுதியவர்)தோன்றி னார்கள். பின்னர் ஒவ்வொரு குடியரசிலும் புரட்சிப் பாவலர்கள் இருபதுகளின் தொடக்கத்தில் புதுவாழ்வு மலர்வதனை முன்னறி விப்பவர்களாகத் தோன்றியதனை நாம் காண்கிறோம்.

vii