பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தம்புதி தாய்த்திறந்த சிற்றுாரின் பள்ளி புகட்டியபண் அத்தனையும் ஒன்றுவிடா மல்தாம் வைத்திசைப்பார் வையத்தார் காத்திருந்து மகிழ்வாய் வாய்திறந்து கேட்டிருப்பார் வடிக்கும்இசை எல்லாம்.

யாரும்உணர்ந் திடுமுன்னர் மாலைவந்து நிற்கும், இருங்கருக்கல் ஒளிவானில் தெளிந்துபரந் தோங்கும், பேரிசையோ உளம்பிணிக்கும்! பிடித்திழுக்கும் நெஞ்சை, பேசாமல் புத்தகத்தை மூடிஉள்ளே வைப்பேன்.

பீதுவனாம் பெரும்புலவீர்! மலைவாழ்க்கை நீங்கிப் பெருநகர்க்குள் இங்குவந்தீர்! என்னுள்ளும் புகுந்தீர்! ஒதுபழங் குறிஞ்சிஇசை அன்றிவேறு அறியா ஊர்ப்புறத்தி னின்றிங்கே எமைஅடைந்து விட்டீர்.

துயர்ப்பாட்டை மலைக்குறவன் இசைக்கையிலே இங்குத் து.ாங்கிப்போய்க் கற்கள்தாம் கேட்டிருக்கும்; இன்றோ உயர் இசையை அறிந்துகொண்டோம். இனிவிடவும் மாட்டோம் ஒண்புலவீர், பீதுவரே, எம்விருந்து நீரே!

75