பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -- o m --- ol. ੋ। o ho தது ஐந்தாண்டு பள்ளி அனுபவமாவது வே == == - - - is. * . o: -- **** o o, o =. - - கல்விக் கழகத்திலோ, பல்கலைக்கழகத்தி லர் உயர் பட்டம் - +. . . . . . " ‘’ To o, o – பெற்றிருக்க வேண்டும். சாதாரண்மாக ஆய்வாளர் அனு பவம் பெற்றவர்களில் இருந்து உயர் நிர்வாகப் பதவிகளுக்கு ஆட்களே நியமிப்பார்கள். ஆசிரியர்களுக்கு இருப்பது போல, ஆய்வாளர்களுக்கும் ஒரே சீரான காலங்களில், பணி யிடைப் பயிற்சி உண்டு. ஆய்வாளர்களுக்கான் பயிற்சி, கல்வி அலுவலர்களைப் பயிற்றும் கழகங்களில் நடக்கும். தொட்டில் முதல் தள்ளாத வயது வரையில் உள்ள, மிக எண்ணற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு மலை போன்ற கல்வித் திட்டத்திற்கு, பெரு நிதி தேவைப்படுவது இயற் கை. நல்ல கல்வி மலிவாகக் கிடைக்க்ாது: அதற்கு நிறை யப் பிடிக்கும். இதை சோவியத் அரசு உணர்ந்துள்ளது: எவ்விதத் தடையும் இல்லாமல் தாராளமாக வேண்டிய நிதியை ஒதுக்குகிறது. o சோவியத் அரசு, கல்விக்கும், கலைக்கும் μο&υμοτοι நிதி உதவி அளிப்பது, சோவியத் கல்வி முறையில் ஒளி விடும் கூருகும். நாட்டு வளர்ச்சியில் கல்விக்குரிய முக்கிய பங்கினே அரசு உணர்ந்திருப்பதற்கு அடையாளம் அப்பெரு நிதி. பத்தாண்டுக்குப் பத்தாண்டு கல்வி விரைந்து வளர்ந்து கொண்டிருப்பதோடு, தரத்திலும் உயர்ந்து கொண்டிருப்பது, இத்தாராளக் கொள்கை இடைய்ருது மேற் கொள்ளப்பட்டிருப்பதற்குச் சான்ருக விளங்குகிறது. கல்வியை, மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த முதலீடாக, சோவியத் அரசும், சமுதாயமும் கருதுகின்றன. அதற்கு எவ்வளவு முன்னுரிமை கொடுத்திருக்கிருர்கள் என்பதை கல்விக்காக ஒதுக்கும் பெருநிதியும், ஆண்டுக்கு ஆண்டு அது பெருகும் வீதமும் காட்டுகின்றன. நாட்டின் பொருளியலில், கல்வி, முன்னடத்தும் துறைகளில் ஒன்று என்று சோவியத் அரசு கருதுகிறது. கல்விக்காக ஒதுக்கும் நிதியையும் ஆட்பெருக்கத்தையும் கொண்டு இதற்குக் கொ டுக்கும் முக்கியத்துவத்தை அறியலாம்.

கல்விக்கான நிதி, முக்கியமாக இரு வழிகளில் கிடைக் கிறது. அரசின் வரவு செலவுத் திட்டங்களில் கல்விக்காக

125