பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. = i+ நாடு தழுவிய முதியோர் எழுத்தறிவு இயக்கத்தில், இலட்சக் கணக்கான தொண்டர்களைச் சே iiத்தல் வேண் டும். எழுத்தறிவிக்கும் வகுப்புகள், நாளைக்கு இரண்டு மணிகளுக்கு மேல் நடக்கக் கூடாது. படிக்க வரும் முதி யோர்களின் வசதிப்படி வகுப்பு நேரம் அமைய வேண்டும். வகுப்பு நேரம், பருவத்திற்கு பருவம் மாறுபடலாம். முதி யோர் எழுத்தறிவுப் பள்ளிகளுக்கு வரும் முதியவர்களிடம் எவ்விதக் கட்டணமும் வாங்கக் கூடாது. முதியவர்களுக்கு பாட நூல்களையும், எழுது பொருள்களையும் இலவசமாகக் கொடுக்க வேண்டும். தக்க சூழ்நிலையையும், ஊக்கத்தை யும் உருவாக்கவும் முடிந்த அளவு பொருள் உதவிகளைப் பெறவும் பொது மக்கள் அமைப்புகளின் ஆதரவைப் பெற வேண்டும். தனியார், பொது அறக் கட்டளைகள், தொழில் நிறுவனங்கள், வாணிக நிலையங்கள் ஆகியவை கற்க வரும் முதியோர்களுக்குத் தேவையான நூல்களையும், எழுது பொருள்களையும் வாங்கி, இலவசமாகத் தந்து உதவலாம். முதலில் தொடக்கக் கல்வியாவது எல்லோர்க்கும் எட்டுவதற்கு அடிப்படையாக, நாடு முழுவதிலும் போதிய தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட வேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் நடக்கும் துரத்தில் தொடக்கப் பள்ளி கிட்டும் வகையில் அவற்றை அமைக்க வேண்டும். எது நடக்கும் தூரம் என்பது அப்பக்கத்து நில அமைப்பிஅேப் பொறுத்ததாகும். எல்லார்க்கும் எட்டுதல் என்பதைக் கருத்தில் கொண்டு போதிய எண்ணிக்கையில் தொடக்கப் பள்ளிகளே, அரசே நிறுவி பாமரிக்க வேண்டும். முதலில் தொடக்கக் கல்வியை எல்லார்க்கும் இலவச பாக்க வேண்டும். படிப்படியாக, அடுத்த உயர் மட்டக் கல் விக்கு இலவசம் விரிவாக்கப்பட வேண்டும். எல்லோரும் தொடக்கக் கல்வி பெறும் வரை, அடுத்த மட்டக் கல்வி வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் ஒத்தி வைக்கக் கூடாது. அவற்றின் சாதாரண சராசரி வளர்ச்சியாவது காப்பாற்றப்படுவதற்கு வேண்டிய நிதியும் ஆட்களும் கொடுக்க வேண்டும். ஏனென்ருல், எல்லோரும் பள்ளிக்குச் செல்லும் அளவு தொடக்கக் கல்வியை விரிவு 131