பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுப்பது நம் நோக்கமாகட்டும். உயர்நிலைப் பள்ளியில் கடைசி இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலத்தில் வேலை நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியை சமுதாயத்திற்குப் பயன் படும் உற்பத்தி நடவடிக்கைகளில் செலவிட வேண்டும். இது, சிலருக்கல்ல, எல்லார்க்கும், கல்வியின் இன்றியமை யாத பகுதியாக அமைய வேண்டும். பொது மக்களின் பண்பாட்டு நிலையை உயர்த்துவதில் துணையாக இருக்கக் கூடியது. நாடு தழுவிய பொது நூலக அமைப்பாகும். தொடக்கப் பள்ளி உட்பட ஒவ்வொரு பள்ளியிலும் நல்ல நூலகத்தை நிறுவுவதோடு, பொது நூலகங்களே நிறுவ வேண்டும். கல்விக்குச் சாவி, ஆசிரியரே ஆவார். அவருடைய திறமையின் தரத்தையொட்டி, மக்கள் பெறும் கல்வியின் தரம் அமையும். எனவே, பணிக்கு முந்தியும் பணியிட்ை யும் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கேற்ற பணிப் பயிற்சித் திட்டம் தேவைப்படுகிறது. ஆசிரியர் கள், தங்கள் பொதுக் கல்வி அல்லது தொழிற் கல்வித் தகு திகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் இல்லாது போனல், அவற்றை ஏற்படுத்த வேண்டும்; இருந்தால், முடிந்த அளவு மிக அதிகமானவர்களுக்குப் போதுமான அளவிற்கு அவ்வாய்ப்புக்களை விரிவுபடுத்த வேண்டும். வகுப்பு நடவடிக்கைகளுக்கு வலிவூட்டும் புற பாட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல் வேண்டும். ஒவ்வொரு மானவரும் குறைந்தது ஒரு புற பாட நடவடிக்கையிலா வது பங்கு கொள்ளும்படி ஊக்கப்படுத்த வேண்டும். பொது மக்களுடைய அக்கறையும், ஈடுபாடும் இல் லாமல் நாடு தழுவிய, பெரும் கல்வி வளர்ச்சியையோ, உயர்வையோ காண இயலாது. பொது மக்களுடைய மன தைப் பண்படுத்தி, எல்லார்க்கும் கல்வி என்னும் கோட் பாட்டில் அக்கறை கொள்ளச் செய்து, இலட்சியங்களை நடைமுறைகளாக்குவதில் ஈடுபடும்படி சய்வதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஒவ் வொரு பள்ளியிலும் பெற்ருேர் சங்கங்களை நிறுவுவதும் அவற்றைச் சுறுசுறுப்பாக செயல்பட வைத்தலும் கல்வி சோ.க.மு-9 133