பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் படித்திருக்கிருர்கள். மேற்பட்ட படிப்புப் பெற் றுள்ள கஸ்ாக், உஸ்பெக் பெண்கள் ஏராளம். சோவியத் ஆட்சி இதோடு நிறைவு கொள்ளவில்லை. கூட்டுப் பண்ணைகளிலும் தொழிற் சாலைகளிலும் பணி புரியும் எல்லோரையும் முழுமையாகவே அறிவாளிகளாக ஆக்கும் பொருட்டு சோவியத் ஒன்றியம் எல்லாவற்றையும் செய்து வருகிறது. மக்கள் அனைவரும் தத்தம் அறிவு. ஆற்றல், திறன்களையும் உச்ச மட்டத்திற்கு வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவான ஒவ்வொன்றும் செய்யப்படுகிறது. 1913 இல், இரண்டு இலட்சத்து தொண்ணுருயிரம் பேர்களே சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிகள், அதற்கு மேற்பட்ட கல்வி நிலையங்கள், முதலியவற்றில் முழுமை யாகவோ அரை குறையாகவோ படித்தவர்கள். 1970இல் அத்தகையோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே நாற்பத்தி மூன்று இலட்சமாக உயர்ந்து விட்டது. சோவியத் நாட்டில் நிகழ்ந்த இத்தகைய கல்வி வளர்ச்சி யால் கிராமப்புற மக்களும் நன்மையடைந்தார்கள். நாட் டுப் புறங்களில் உழைத்துக் கொண்டிருக்கும் பாட்டாளி களில் பாதிக்கு மேற்பட்டவர்கள், உயர் கல்வியோ, உயர்நிலைப் பள்ளிக் கல்வியோ பெற்றவர்கள். 'சோவியத் ஒன்றியத்திலுள்ளவர்களில், மூவருக்கு ஒருவர் கல்வி கற்றுக் கொண்டிருக்கிருர், உலகத்தில் வெளியாகும் நூல்களில் மூன்றில் ஒன்று, சோவியத் நாட் டில் வெளியாகிறது: உலக மானுக்கரில், நால்வரில் ஒரு வர் சோவியத் மாளுக்கர் உலகில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் நால்வரில் ஒருவர், சோவியத் ஆய் வாளர்; உலகத்திலுள்ள மருத்துவர்களில் நால்வரில் ஒரு வர் சோவியத் மருத்துவர். இக்கூற்று உண்மையான தகவல்களின் படப்பிடிப்பு. சோவியத் கல்வி )UD6יהT(, குறிக்கோள் உடையது; தரமானது; மிகப் பரந்தது என் பதற்கு இவை சிறந்த சான்றுகளாகும். அறுபது ஆண்டுகள் என்னும் குறுகிய கால கட்டத் தில் இத்தகைய அற்புதம் எப்படி நிகழ்ந்தது? மக்களுக் 25