பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய சமுதாய மாற்றங்கள், இரண்டையும் இணைக்கும் ங்கையில் சோவியத் கல்வி முறை அமைந்துள்ளது. கலைப் புரட்சியின் முடிவான விளைவு, புதிய மனிதனை உருவாக்குவதே. அம்மனிதன், உயர்ந்த ஒழுக்க நெறி 'களும், உள வளமும், உடலிலும் அறிவிலும் சீரான வளர்ச்சியும் பெற்றவர் ஆவார். புரட்சி நட்ந்த பிறகு, பதின்மூன்ரும் ஆண்டில், இரவீந்திரநாத தாகூர் சோவியத் ஒன்றியத்திற்குச் சென்ருர், சோவியத் கல்வி முறையைத் துருவிப் பார்த்தார். பார்த்த பிறகு 'அந்நாட்டில் மக்கள் சிந்தனை உயர்ந்து ஒடுவதை உணர்ந்தேன். அங்கு ஒவ்வொருவருடைய படிப்பும் எல்லோருடைய படிப்பிற் கும் துணை நிற்கிறது. எவர் ஒருவருடைய குறைவான படிப்பும் மற்றவர்களுடைய மனதில் தைக்கிறது' என்று எழுதினர். எல்லோர்க்கும் கல்வி கொடுப்பதன் மூலம், சோவி யத் மக்கள், கூட்டறிவை நாடு முழுவதிலும் வளர்த்து விட்டார்கள். தாகூர் கண்ட, உயர் சிந்தனையோட்டம் இன்றும் தொடர்கிறது. இதல்ை, சென்ற அறுபது ஆண் டுகளில், சோவியத் நாட்டு மக்களில் வாழ்க்கையில் எல் லாக் கூறுகளும் மாறியுள்ளன. அக்டோபர் புரட்சியின் ஐம்பதாவது நிறைவு விழா வில் பேசிய சோவிய்த் ஒன்றிய கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலராகிய எல்.ஐ.பிரெஷ்னேவ், நாம் முழு மையும் புதிய உலகை அமைத்து விட்டோம்; புதிய சம தர்ம உறவுகள், புதிய சோவியத் மனிதன் உள்ள உல கைக் கட்டியுள்ளோம். சோவியத் மக்களின் உணர்வு மண்டலம் நெடுந்துரம் விரிந்து விட்டது. அவர்களுடைய ஒழுக்க முறைகள், தொழில் பற்றிய அவர்களுடைய போக்கு, சமுதாயத்தைப் பற்றிய, ஒருவருக்கொருவரைப் பற்றிய க்ண்ணோட்டம் ஆகியவை மாறி விட்டன என்று கூறினர். எந்தக் கோடியில் வாழ்ந்தாலும் எத் தொழிலில் இருந்தாலும் ஒவ்வொருவருடைய பொருளியல், அறி வியல், நிலையையும் வளர்க்கும் வகையில், சோவியத் நாடு