பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுவதும் கற்பதிலும் உழைப்பதிலும், சிந்திப்பதிலும் வாழ்க்கையை சீரமைப்பதிலும் ஈடுபட்டிருக்கிறதென் முல் மிகையாகாது. சோவியத் கல்வி முறையின் சிறந்த பயனுக்கு இதை விட உயர்ந்த பாராட்டு ஏது? இவ் வெற்றியின் இரகசியம் என்ன? சோவியத் கல்வி முறை, கண்டபடி முளைத்து வளர்ந்த தல்ல. இது, சிறந்த தொலை நோக்கில் கருவுற்றது. இது, செம்மையான சிந்தனையில் முளைத்தது; விஞ்ஞான அடிப் படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்ற காலத்து கற்பிக்கும் இயலின் கருவூலங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டது. s - சோவியத் கல்வி, பன்முகங் கொண்ட, பெரும் மாளிகையாகும். மனிதன் எல்லையற்றுக் கற்கும் ஆற்றல் உடையவன் என்னும் நம்பிக்கையின்மேல் இது எழுப்பப் பட்டிருக்கிறது. சென்ற நூற்ருண்டில், ஐ.எம்.செசனெவ் என்னும் இரஷ்ஷிய உடலியல் அறிஞர் வாழ்ந்தார். மனித அறிவில், ஆயிரத்துக்கு ஒரு பங்கே இயற்கையில் பெற்றது; மற்ற தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்று ஒன்பது பங்கும் கல்வியால்-மிக விரிந்த பொருளில்விளைந்தது என்பது இவருடைய முடிவு. சோவியத் கல்வி யாளர்கள் இதை ஏற்றுக்கொண்டு, எடுத்துக் காட்டுகிருர் கள். மனிதனுடைய ஆளுமை வளர்ச்சியை ஊக்கவோ, தாக்கவோ செய்யும் எல்லாச் சமுதாயக் கூறுகளும் கல்வி' என்பதின் விரிந்த பொருளில் அடங்கும். மனிதனுடைய கற்கும் ஆற்றலுக்கு எல்லையில்லை என்பதை நம்புகிற சோவியத் அரசு, நாட்டிலுள்ள எல்லா ஆண்களையும் பெண்களையும் முடிந்த அளவு உயர்ந்த கல்வியைப் பெற்றவர்களாக்குவதில், அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டது. ஆசிரியர்கள், கட்டடங்கள், தளவாடங்கள், துணைக் கருவிகள், நிதி ஆகியவை மலையளவு தேவைப்பட்ட போதும் மலைக்கவில்லை; சுணங்கவில்லை. சோவியத் ஒன்றிய அரசியல் சட்டம், உயிருக்கு, வேலைக்கு, மருத்துவ வசதிக்கு, ஒய்வு பெறுதலுக்கு, 36