பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயோதிகத்தில் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் செய்வது போல, எல்லோருக்கும் கல்வி உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. புதிய சோவியத் அரசியல் சட்டத்தின் 45வது விதி இவ்வாறு கூறுகிறது: 'சோவியத் ஒன்றியப் பிரஜை கள் கல்வி கற்க உரிமை பெற்றிருக்கிரு.ர்கள். கல்வியின் எல்லா வடிவங்களையும் இலவசமாக அளிப்பதன் மூலமும்: சர்வ ஜன கட்டாய செகண்டரிக் கல்வியை ஏற்படுத்து வதன் மூலமும்; செயல்முறை நடவடிக்கையையும் உற் பத்தியையும் நோக்கமாய்க் கொண்டு போதனை அளிக்கப் படும் தொழிற் கல்வியையும், விசேஷ செகண்டரி மற்றும் உயர் கல்வியையும் விரிவாக அபிவிருத்தி செய்வதன் மூல மும், பள்ளிக்கு அப்பாற்பட்ட, தபால் கல்வி மற்றும் மாலை நேரக் கல்வி முறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலமும்: மாணவர்களுக்கு அரசாங்க உபகாரச் சம்பளங்களும், மானியத் தொகைகளும், சலுகைகளும் வழங்கப்படுவதன் மூலமும், பள்ளிப் பாடப் புத்தகங்களை இலவசமாக அளிப் பதன் மூலமும்; தாய் மொழியில் போதிக்கப்படும் பள்ளிக் கூடத்திற்குச் செல்ல வாய்ப்பு அளிப்பதன் மூலமும்; சுயமாகக் கல்வி கற்றுக் கொள்வதற்கான வசதிகளை அளிப்பதன் மூலமும் இந்த உரிமை உறுதிப்படுத்தப்படு கிறது. இவ்வுரிமை, சட்டத்தில் இடம் பெற்றதோடு நிற்கவில்லை; எல்லோரும் வாழ்க்கையில் துய்க்கிற உரிமை யாகவும் விளங்குகிறது. திட்டமான கோட்பாடுகளின் மேல், சோவியத் கல்வி முறை கட்டப்பட்டு இருக்கிறது. சோவியத் சமு தாயத்தின் வளர்ச்சியில், பல கால கட்டத்தில், புதுப் புது வகை பள்ளிகள் தோன்றியிருக்கலாம்; ஆயினும் பொதுக் கல்வியை சமதர்ம முறையில் உருவாக்கும் அடிப் படைக் கோட்பாடோ அப்படியே இருக்கின்றது. 1973ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சோவியத் ஒன்றிய சுப்ரீம் சோவியத் (நாடாளுமன்றம்) ஏற்றுக்கொண்ட, பொதுக் கல்வி பற்றிய அடிப்படைச் சட்டங்களில் இக்கோட்பாடு சோ.க.மு.-3 37