பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் பெற்றுள்ளது. ஒன்றியக் குடியரசுகளின் சட்டங் களிலும் இது சேர்ந்துள்ளது. பொதுக் கல்வித் துறையில் எய்திய சாதனைகளின் சட்ட உருவமாக இச்சட்டம் அமைந்துள்ளது. வருங் காலத்தில் எந்தப் பாதைகளில் பொதுக் கல்வி தொடர்ந்து வளரும் என்பதையும் இது காட்டுகிறது. சோவியத் ஒன்றியத்தில் பொதுக் கல்வி பற்றிய அடிப்படைக் கொள்கைகள் எவை? அவை வருமாறு : (1) இனம், தேசியம், பால், சமயச் சார்பு, சொத்து அல்லது சமூகநிலை ஆகிய எதையும் பாராமல், சோவியத் குடிமக்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்புகளில் சமத்துவம். (2) எல்லாச் சிறுவர் சிறுமியருக்கும் இளைஞர்களுக் கும் கட்டாயக் கல்வி. பள்ளிக்கூடங்களுக்கு நெடுந்தொலைவில் இருக்கும் குடியிருப்புகளில் வாழும் பிள்ளைகளுக்குப் பள்ளிக்குச் சென்று வர, இலவச வாகன வசதி உண்டு: பகல் உணவு முழுமையும் இலவசமாகவோ, ஒரளவு உதவியோடோ அளிக்கப்படும். சில பகுதிகளில் குடி மக்கள் குறைவு. தூர வடக்கு போன்ற பிரதேசங்களில் தட்ப வெப்ப நிலை கொடுமையானது: மலைப் பகுதிகளிலும் மக்கள் குறைவு. இத்தகைய இடங்களில் இருக்கும் குழந்தைகள் உறையுள் பள்ளிகளில் தங்கிப் படிக்கிருர்கள். இதற்கான செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளுகிறது. (3) எல்லாக் கல்வி நிலையங்களும் பொதுவானவை: அரசுக்குச் சொந்தம். சோவியத் ஒன்றியத்தில் எல்லாக் கல்வி நிலையங்களை யும் அரசே நடத்துகிறது. அரசின் வரவு செலவுத் திட்டத் திலிருந்தே இதற்கான நிதி கிடைக்கிறது. இவை, நாட் டின் பொருளியல் திட்டங்களின் கூறுகளாகவே வளர்க் கப்படுகின்றன். அப்படி வளர்க்கப்படும் போது, நாட்டுப் பொருளியலின் தேவைகளையும் மக்களின் தேவைகளையும் 'கூடிய அளவு முழுமையாகக் கருத்தில் கொள்ளுகிருர்கள். 38