பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(4) பாட மொழியைத் தேர்ந்தெடுக்க உரிமையுண்டு. இது தாய் மொழியாக இருக்கலாம்; அல்லது சோவி யத் நாட்டின் பிற மொழிகளில் ஒன்ருகவும் இருக்கலாம். தத்தம் தாய் மொழிகளிலேயே கற்பதற்கு உரிமை கோரி, இரஷ்ஷியரல்லாத மக்கள், நெடுங் காலம் போரிட் டார்கள். ஆனல் வெற்றி கிட்டவில்லை. அக்டோபர் புரட்சியே இவ்வுரிமையை சோவியத் நாட்டிலுள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் வழங்கிற்று. சோவியத் மக்களுக்குச் சொந்தமான ஐம்பத்தேழு மொழிகளின் வழியாக, சோவியத் பள்ளிகளில் பயில்வோர், கற்பிக்கப்படுகிருர்கள். சோவியத் ஆட்சிக் காலத்தில் தான், நாற்பதற்கு மேற்பட்ட இனங்கள் தங்கள் மொழிகளுக்கு வரி வடிவத்தையே பெற்றன. இதைப் பாட மொழியாக எடுக்கக் கூடாது. இதை எடுக்க வேண்டும்; இன்னென்றை எடுத்தால், சலுகைகள்' என்பன இந்நாட்டில் இல்லை. சோவியத் ஒன்றியத்தில், மக்களிடையே சகோதர வாஞ் சையும் ஒருவருக் கொருவர் நம்பிக்கையும் நிலவுவதால், தேசிய மொழிகள் சமத்துவத்தோடும் ஒன்றையொன்று வளப்படுத்தும் வகையிலும் வளர்கின்றன. (5) தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையில் எல்லாக் கல்வியும் இலவசம். எல்லோருக்கும் கல்வி உரிமை என்னும் கோட்பாட்டை, இலவசக் கல்வி முறையே, உறுதிப்படுத்துகிறது. கல்வி சம்பளமின்றி கிடைப்பதோடு, அரசால் உதவித் தொகை வழங்கும் முறையும் செயல்படுகிறது. தொழிற் பயிற்சிப் பள்ளிகள், தனிப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிகள், உயர் கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பயில்வோருக்கு உபகாரச் சம்பளம் உண்டு. இம்முறை நாடு முழுவதிலும் நிலவுகிறது. - - * - (6) ஒருங்கிணைந்த பொதுக் கல்வி, எல்லா வகைக் கல்வி நிலையங்களும் ஒன்ருேடொன்று தொடர்தல்; இவற் ருல் எளிதாகக் கீழ்நிலைக் கல்வி நிலையத்திலிருந்து அடுத்த மேல் நிலைக் கல்விக் கூடத்திற்கு மாறுதல். 39