பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு முழுமைக்கும் ஒரே வகையான, தொடக்கப் பள்ளி, உயர்பள்ளி, தனிப் ப்யிற்சி உயர் பள்ளி, பல்கலைக் கழகம் ஆகியவை இயங்குகின்றன. 'முட்டுச் சந்தில்: மோதிக் கொண்டு, அடுத்து முன்னேற முடியாத வகை யில், செயல்படும் பள்ளிகள் இங்கு இல்லை. - இதிலிருந்து நாட்டிலுள்ள எல்லாப் பொது உயர் நிலைப் பள்ளிப் பாட திட்டங்களும் முழுக்க முழுக்க ஒன் ருக இருப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. தேசிய மொழி, இலக்கியம், குடியரசுகளின் பூகோளம், வரலாறு ஆகியவற்றிற்கு ஒவ்வொரு குடியரசும் தனித்தனி பாட திட்டங்களை உருவாக்கிக் கொள்ளுகின்றன. பொது உயர்நிலைப் பள்ளியின் கால அளவையிலும் சில வேறுபாடுகள் இருப்பதை இங்கே கவனிப்பது சுவ்ை யுள்ளதாகும். பால்டிக் சமதர்மக் குடியரசுகளான, லாத்வியா, எஸ்தோனியா, லிதுவேனியா ஆகியவற்றில் உயர் நிலைப் பள்ளிகள், மற்ற குடியரசுகளில் இருப்பது போன்று, பத்தாண்டுப் பள்ளிகள் அல்ல; அவை பதினுேரு ஆண்டுப் பள்ளிகள் ஆகும். ஒருங்கிணைந்த பொதுக் கல்வி என்னும் போது எவ் வகைக் கல்வி நிலையங்களிலும் சேர்க்கைத் தகுதி ஒரே சீராக உள்ளது. வேலை பெறும் தகுதியும் அப்படியே இருக் கிறது என்பதே பொருள். (7) ஒருங்கிணைத்து கற்பித்தல்; கம்யூனிச சிந்தனை யோடு வளர்த்தல். h சோவியத் பள்ளிகள் ஒதுங்கியிருந்து செயல்படவில்லை. குடும்ப்த்தோடும் சமுதாயத்தோடும் இணைந்திே, சிறுவர் களையும் இளைஞர்களையும் வளர்ப்பதில் ஈடுபடுகின்றன. வீடொன்று கற்பிக்க, பள்ளியொன்று கற்பிக்க, இரண்டிற்கு மிடையே போட்டி ஏற்படும் நிலை இல்லை. ஒன்றின் முயற் சிக்கு மற்றதின் முயற்சி துணையாகிறது. கல்விபற்றிய கேள்விகளைப் பொது மக்கள் பரவலாக விவாதிக்கிரு.ர்கள்: ஒவ்வொரு சோவியத் பள்ளியிலும் சுறுசுறுப்பாகச் செயல்படும் பெற்ருேர் குழு உண்டு. ஆசிரியர்கள், தங் ՎՎ) -