பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள பாடங்களை வெற்றிகரமாக முடிக்க, பெற்றேர் குழுக் கள் துணையாகின்றன. வளர்ந்து வரும் தலைமுறையை, அனைத்துலக உணர்வோடும் எல்லாப் பாட்டாளிகள் பேரி லும் நேசத்தோடும் வளர்க்கும் போற்றற்குரிய பணியில், சோவியத் பள்ளிகள், குடும்பங்களின் ஒத்துழைப்போடு ஈடுபட்டுள்ளன. (8) உள்ள சூழ்நிலையோடும் கம்யூனிச கட்டமைப்பு நடைமுறையோடும் பாடங்களைக் கற்பித்தலையும் இளைஞர் களே வளர்ப்பதையும் இணைத்தல். எனவே, சோவியத் பள்ளிக்கூடத்தில் பாடங்க ளோடு வேலையும் உண்டு. ஏட்டறிவோடு வேலை அனுபவத் தையும் இவை அளிக்கின்றன. மாளுக்கரின் நலன்களோ டும் சமுதாயத்தின் தேவைகளோடும் நெருக்கமான தொடர்புடையது சோவியத் பள்ளி. மாணவன் செயல் படுவதற்கு பல வழிகளைக் காட்டுகிறது. கூட்டு உற்பத்தி வாழ்க்சையைப் புரிந்து பாராட்டக் கற்றுக் கொடுக்கிறது. மாளுக்கன் மதிக்கத்தக்க குறிக்கோளை, தானே தேர்ந் தெடுக்கக் கற்பிக்கிறது. (9) விஞ்ஞான அடிப்படையிலான கல்வி; விஞ் ஞானம், தொழில் நுட்பம், கலே ஆகிய துறைகளில் காணும் புதுமைகளையொட்டி இதைத் தொடர்ந்து விர மைத்தல். == நாம் வாழும் காலத்தில் பல துறைகளில் விரைவான மாற்றங்களைக் காண்கிருேம். எனவே, கற்பிக்கும் செய் திகள், சரியாகவும் அப்போதைக்கும் உண்மையாகவும் விஞ்ஞான ரீதியில் அமைந்ததாகவும் இருக்கும் பொருட்டு. பாட திட்டங்களே அப்போதைக்கப்போது முறையாக மாற்றி பமைத்தல், இன்றியமையாததாகிறது. பாடம் சொல் லும் முறைகளும் மீண்டும் மீண்டும் ஆராயப்படுகின்றன. (10) கல்வியும் குழந்தை வளர்ப்பும் மனித பாசத் தையும் சிறந்த ஒழுக்க உணர்வினையும் உடையதாகுதல். பிஞ்சுப் பருவந்தொட்டே, நல்லதை விழையும் உணர்வினை, குழந்தைகளிடம் வளர்ப்பதில் சோவியத் HI