பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி அக்கறை காட்டுகிறது. நல்லதையும் அல்லதையும் அடையாளம் கண்டு கொள்ளும் திறனை வளர்க்கிறது. எத்தன்மைத்தாயினும் தீமையை எதிர்த்துப் போராடும் பாங்கில், இளைஞர்களை வளர்க்கிறது. (11) ஆணும் பெண்ணும் ஒன்ருக இருந்து படித்தல். சோவியத் கல்வியின் ஆழமான கடைக் கால்களில் ஒன்ருக இக்கொள்கை விளங்குகிறது. பொருளியல், சமூக இயல், கலையியல் ஆகிய துறைகளில், ஆண் பெண் சமத்துவம் முழுமையாக நிலவுவதைப் பற்றி, சோவியத் மக்கள் உரிமையோடு பெருமை கொள்கிருர்கள். ஆண், பெண்களுக்கிடையே காணக்கூடிய, உள, உடல் வேறு பாடுகள், தனித்தனிப் பாடத் திட்டங்களை நியாயப்படுத்து மளவிற்கு ஆதாரமானவை என்று சோவியத் கல்வியாளர் கள் நம்பவில்லை. களும், இளைஞர்களும் இளம் பெண்களும் சேர்ந்தே படிக் கிருர்கள். பையன்களையும் இளைஞர்களையும் எந்த அடிப் படையில், தொழில் நுட்ப உயர்நிலைப் பள்ளிகளிலும் உயர் கல்வி நிலையங்களிலும் சேர்க்கிருர்களோ, அதே அடிப்படையில் பெண் பிள்ளைகளும் பெண்களும் சேர்த் துக் கொள்ளப்படுகிருர்கள். s கல்வியின் எல்லா நிலைகளிலும் பையன்களும் பெண் சோவியத் ஒன்றியத்தின் 1959-ஆம் ஆண்டின் குடிக் கணக்கின்படி, உயர் கல்வி பெற்றவர்களில் நூற்றுக்கு நாற்பத்தொன்பது பேர்கள் பெண்கள். நுட்பத் தொழில் பிரிவுகளில், மொத்தத்தில் நூற்றுக்கு ஐம்பத்தேழு விழுக் காட்டில் பெண்கள் இருந்தார்கள். (12) சமய வாடையில்லாத, அதன் செல்வாக்குக்கு ஆட்படாத கல்வி. அக்டோபர் புரட்சிக்குப் பின், பிறிப்பிக்கப்பட்ட முதல் சோவியத் ஆணைகளில் ஒன்று, பள்ளிக் கூடங்களுக் கும் மத அமைப்புகளுக்கும் இருந்த தொடர்பினை கத்த ரித்து விட்டது. இது, நாடு முழுவதிலும் லோகாயுதக் கல்வி முறையை வளர்ப்பதற்கு அடிப்படையாக அமைந்தது. 42