பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-அதாவது நாட்டுக்கு நாடு மாறுபடும் பள்ளி வயதைஅடையும் வரையில் கல்வி காத்திருப்பதில்லை. தொட்டிலில் தொடங்கிய கல்வி பாலர் பள்ளி வகுப்பறைகளில், உணவுக் கூடங்களில், நூல் நிலையங் களில் தொடர்கிறது; விளையாட்டுத் திடல்களில் தொடர் கிறது. அடுத்த நிலைக் கல்வி நிலையங்களில், கல்வி, முறைப் படுத்தப்படுகிறது. பின்னர், இக்கால மனிதனுக்குக் கல்வி வாழ்க்கை முழுவதும் மூச்சாகி விடுகிறது. எனவே கல்வியை சட்டப்படியான பள்ளி வயது வரை தள்ளிப் போடவோ, மானுட வாழ்வின் ஒரு காலத்தோடு கட்டுப் படுத்தவோ இயலாது. நாம், தெரிந்தோ, தெரியாமலோ, வாழ்நாள் முழுவதும் கல்வியைப் பெறுகிருேம். மனிதனுக்குத் தந்தை குழந்தையாகும். நல்ல மனி தன உறுதிப்படுத்த. குழந்தைகளைச் சரியாகப் பராமரித்து, நன் முறையில் வளர்க்க வேண்டும். 'சின்னஞ் சிறு வய தில் பிடித்துக் கொள், என்பது கல்விக்கு மிகப் பொருத் தம். வளரும் குழந்தை, கை கால்களைப் பயன்படுத்தவும் ஆடவும் மற்ற, குறிப்பாக, சமவயதுப் பிள்ளைகள் பல ரோடு சேர்ந்திருக்கவும் தொடங்கும் போது, குடும்பம் என்னும் சிறிய வட்டம் இக்கட்டாக இருக்கும். அ | | வயதுடைய பிள்ளைகள் பலரோடு இருக்கவும், அவர்க ளோடு சேர்ந்து கற்கவும் விளையாடவும் அவர்களோடு பொம்மைகளைப் பங்கிட்டுக் கொள்ளவும் தாராளமான வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. தங்கள் கண்களைக் கூர்ந்து பார்க்கவும், கைகளைப் பலவற்றைச் சேர்த்துக் கட்ட வும் கால்களே விளையாடவும் பயன்படுத்தும் பயிற்சி பின்னர் வரப்போகும் முறையான கல்விக்கு அடித்தளமாகிறது.

பள்ளிக்கு முந்திய கல்விக் கூடங்களில், துய்மையாக இருக்கவும். பலரோடு ஒத்து இருக்கவும், கவனமாகக் கேட்கவும் தெளிவாகப் பேசவும் எழுதும் படிக்கும் பொருள் களைப் பத்திரமாகக் கையாளவும் கற்றுக் கொள்ளும் பிள்ளைகள், பின்னர் முறையான படிப்பில் முன்னணியில் நிற்பார்கள். 46