பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலர் கல்வியின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும், பெற்ருேர்களும் உளவியலாரும் குழந்தை மருத்துவர்களும் கல்வியாளர்களும் மேலும் மேலும் உணர்ந்து வருகிருர்கள். அநேக நாடுகளில் இத்தெளிவு. அண்மைக்கால நிகழ்ச்சி யாகும். இக்காலச் சூழ்நிலைக்குத் தேவையான அளவு ஆழி மாக இத்தெளிவைப் பெருத பல நாடுகள் இன்றும் உள்ளன. ஜார் ஆண்ட இரஷ்ஷியா, பொது மக்கள் கல்வியை அலட்சியப்படுத்திற்று. எனவே, நாட்டின் பல பக்கங் களிலும் அரசின் சார்பில் தொடக்கப் பள்ளிகள் தொடங் கவில்லை. அந்நிலையில், பள்ளிக்கு முந்திய கல்வி இல்லே யென்றே சொல்லி விடலாம். 1917-இல் நடந்த அக் டோபர் புரட்சிக்கு முன்பு, இரஷ்வியா முழுவதிலும் 275 பாலர் பள்ளி'களே இருந்தன. அவற்றில் 150 இண்டர் கார்டன் பள்ளிகள்; அப்பள்ளிகளுக்குச் சென் ருேர் மொத்தம் நாலாயிரம் பேர்களே. அப்பள்ளிகள், பி ட்டர்ஸ்பர்க், மாஸ்கோ, கீவ் போன்ற பெரிய நகரங் களிலேயே பெரும்பாலும் இருந்தன. அவை போக சில அறக் கட்டளைகள், பாட்டாளிகளின் குழந்தைகளுக்காக, பத்துப் பதினைந்து கிண்டர் கார்டன் பள்ளிகளை நடத்தி வந்தன. அப்போதைய பாலர் பள்ளிகள் நிறையச் சம் பளம் வசூலித்தன. எனவே வளமான குடும்பங்களுக்கே அவை பயன்பட்டன. புரட்சிக்கு முன்பு இருந்த 'பால்வாடி'கள் இரண்டு மாத சிசுக்கள் முதல் பத்து வயதுப் பிள்ளைகள் வரையில் சேர்த்துக் கொண்டன. இப்போது செய்வது போல், பிள்ே2ளகளை வயது வாரியாகப் பிரிக்கவில்லை. ஆறு வய தாகி விட்டால், குழந்தைகள் பெரியவர்களின் வேலை களுக்கு உதவ வேண்டும். ஜார் காலத்தில், அப்பள்ளிகளில் நடந்த கல்விப் பணி என்ன? கல்விப் பணியே இல்லை. அவற்றை நடத் திய பெண்கள் அநேகமாக தற்குறிகள். பெரும்பாலும் பைபிள் பாட்டுகள் பாடவே கற்றுக் கொடுத்தார்கள். அதைத் தவிர, குறிப்பிட்ட திட்டம் இல்லை. சிறுவர் 47