பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுமியர்களே, மலிவான உழைப்பாளிகளாக ஆயத்த ஞ் செய்யும் ஒரே நோக்கத்திற்கே, அவை பயன்பட்டன. ஜார் கால, பாலர் பள்ளிகளுக்கென்று தனியாகக் கட்டப்பட்ட கட்டடங்களோ அருமை . குடியானவர் களின் வீடுகள் உட்பட எல்லா வகைக் கட்டடங்களும் பயன்படுத்தப்பட்டன. பிரம்படி, வெகு சாதாரணம். அதுவே. அன்றைய சூழல். H சோவியத் ஆட்சி தொடக்கம் முதல், அரசினுடைய பாலர் பள்ளிகளை நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் தொடங் குவது பற்றிப் பெரும் சிந்தனையும் முயற்சியும் அக்கறையும் செலுத்தியது. இரஷ்ஷியாவின் முற்போக்கு ஆசிரியர் "கள், கல்வியாளர்களின் சிந்தனைகளையும் கருத்துகளையும் நிறைய எடுத்துக் கொண்டது. குழந்தையின் உடலும், அறிவும் பள்ளிக்கு முந்திய பருவத்திலேயே மிக விரைவாக வளர்கின்றன. நம் வாழ்க்கையில் மிக பாதிப்பிற்கான ஆண்டுகளில் நடப் பவை நம் வாழ்க்கைப் போக்கையே முடிவு செய்கிறது என்பதை விஞ்ஞானிகள் காட்டியுள்ளார்கள். குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது முடி வதற்குள், அதன் எதிர்கால அறிவு ஒழுக்க அடிப்படை கள் முதலியவை அமைந்து விடுகின்றன என்பதை விஞ் ஞான ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. இக்காலத்தில் தான். குழந்தையின் இயற்கை உந்துதல்களையொட்டி, முக்கிய மான ஒழுக்க இயல்புகள். சிலம், ஆற்றல்கள் ஆகியவை அமைகின்றன. இப்பருவத்தில் குழந்தை எப்படி வளர்க் கப்படுகிறதோ, அதற்கேற்ப, அதனுடைய எதிர்காலப் பழக்கங்களும் சார்புகளும் உருவாகின்றன. தனது ஆசி ரியருடைய செல்வாக்கிற்கு இளம் பிள்ளைகள், பெரிதும் கட்டுப் பட்டிருக்கிருர்கள். குழந்தையின் மேல் ஆசிரி யரின் ஆளுமை செலுத்தும் செல்வாக்கைத் தள்ளிவிட்டு, வேருென்றைப் புகுத்த இயலாது. கற்பிப்போரின் ஆளுமை நேரடியாக செல்வாக்கு கொள்ளுவதன் மூலமே குழந் தையின் ஒழுக்கத்தை வளர்க்க முடியும். 48