பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் ஒன்றியம், தனது அமைப்புக்கு மட்டு மல்லாது. வேறு பலவற்றிற்கு, பெரியார் லெனினுடைய எழுச்சியூட்டும் தலைமைக்கும் வழி நடத்தலுக்கும் கடமைப் பட்டிருக்கிறது. இவருடைய பேரறிவில் முளைத்த சிறந்த வற்றுள் ஒன்று. பொதுப் பாலர் பள்ளிகள். சோவியத் நாட்டின் வருங்கால மனிதனை உருவாக்குவதில், பாலர் பள்ளிகள் எவ்வளவு பெரிய பணியாற்றக் கூடும் என் பதை இவர் நன்கு உணர்ந்திருந்தார். நர்சரி பள்ளி களும் கிண்டர் கார்டன் பள்ளிகளும் 'கம்யூனிசப் பசும் தளிர்கள்' என்று லெனின் வர்ணித்தார். 'பெண்களை மெய்யாகவே விடுவிக்கவும் பெண் ஆண் சமத்துவமின் மையைக் குறைத்துக் கொண்டே அடியோடு நீக்கவும் பெண்கள் சமூக உற்பத்திப் பணிகளிலும் பொது வாழ்க் கையிலும் பங்கு கொள்ளவும் உதவும் சாதனங்கள், பாலர் பள்ளிகள்' என்பதை லெனின் கண்டார். எனவே, எல்லா சோவியத் அமைப்புகளும் நிறுவனங்களும் பெண் களும் கிண்டர் கார்டன்களை அமைப்பதில் ஊக்கமான பங்கு கொள்ள வேண்டுமென்று லெனின் விரும்பினுள். பொது பாலர் பள்ளிகளைப் பற்றிய லெனினுடைய கருத்துகள் சோவியத் ஆட்சியின் முதல் ஆணைகளிலேயே இடம் பெற்றன. 1917-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் நாள். மக்கள் ஆணே அவை (அமைச்சரவை) கல்வி ஆண யகம் ஒன்றை நிறுவும் ஆணையைப் பிறப்பித்தது. 1917 நவம்பர் 20-ம் நாளன்று பாலர் கல்வி (பள்ளிக்கு முந் திய கல்வி) பற்றிய அறிவிப்பு வெளியாயிற்று. அவ்வறி விப்பு கொள்கைகளையும் பின்பற்ற வேண்டிய திசைகளை யும் தெளிவாக வெளியிட்டது. அது, குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, குழந்தைக் கல்வி பொதுவில் தொடங் கவேண்டுமென்று காட்டிற்று. இந்த பாலர் கல்வி அதிகப் படிமீான ஒன்ரு? இல்லை; பொதுக் கல்வி முறையில் இணைந்த ஒரு பகுதியாகும். கிண்டர் கார்டன் கல்வி முதல் உயர் கல்வி வரை எல்லா நிலைக் கல்விகளும் ஒன்றிணைந்தவை; ஒன்ருேடொன்று தொடர்புடையவை. என்னும் கொள்கை அந்த அறிவிப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. 49