பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டின் பொருளியல் வளர வளர, மேலும் மேலும் பல பெண்கள் உற்பத்தித் தொழில்களிலும் சமுதாயத் திற்குப் பயன்படும் பணிகளிலும் ஈடுபட்டார்கள். இம் மாற்றங்களையொட்டி, பாலர் பள்ளிகள் பெருகின. இன்று சோவியத் ஒன்றியத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி கள், அலுவலர்கள் முதலியோரில் பாதிப்பேர் பெண்கள் ஆவார்கள். நுட்பத் திறன்களும் உயர் கல்வி அல்லது தனிப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பெற்ற தொழிலாளர்களில் நூற்றுக்கு அறுபது விழுக்காட்டினர் பெண்கள். நாட்டின் மருத்துவ, ஆசிரியத் தொழிலில் முக்கால் பங்கினர் பெண்கள். சோவியத் நாட்டில், 1976-ஆம் ஆண்டில், கோடி 15 இலட்சம் பாலர் களுக்குப் பணிபுரியும் 1, 15,000 பாலர் பள்ளிகள் இருந் ததால், ஏராளமான பெண்கள் உத்தியோகங்களை ஏற் றுக் கொள்ள முடிந்தது. குழந்தையை வளர்ப்பதில் மூழ்கி விடுவதா அல்லது வேலை பார்க்கப் போவதா என் னும் சிக்கல் சோவியத் தாய்க் குலத்திற்கு ஏற்படுவதில்லை. சோவியத் ஒன்றியத்திலுள்ள ஒவ்வொரு குடும்பமும் பாலர் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பும் அளவிற்கு, நர்சரி, கிண்டர் கார்டன் பள்ளிகள் பெருகியுள்ளதால், சோவியத் தாய், வேலையும் பார்த்துக் கொண்டு, பிள்ளை யையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. குழந்தைகளைச் செம்மையாகப் பார்த்துக் கொள்வதற்கு அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது. தாங்கள் தொழில் புரிந்து கொண் டிருக்கும் போது, தங்கள் குழந்தைகள் நன்ருகப் பரா மரிக்கப்படும்; உரிய வேளைகளில் உணவைப் பெறும்; போதிய கவனிப்பு கிடைக்கும் என்னும் நம்பிக்கையோடு சோவியத் தாய்மார்கள் இருக்கிருர்கள். நாடு முழுவதிலும் தோன்றிய பாலர் பள்ளிகள் . பெண்கள் விடுதலைக்கு உதவி புரிந்தன. பாலர்களை பொது வில் வளர்க்க. மக்கள் வாழ்க்கை முறையை புதிய சம தர்மப் பாதையில் சீரமைக்க, புதிய மனிதனை உருவாக்க, வருங்கால சோஷலிச சமுதாயத்தின் குடி மக்களை நன் முறையில் வளர்க்க, பாலர் பள்ளி முறை, பெரிதும் பயன் 50