பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுகிறது. இப்படிக் குழந்தைகளைப் பொதுவில் வளர்ப்ப தால், அக்குழந்தைகளுக்குப் பெற்ருேர்பால் உள்ள பாசம் குறைவதில்லை: மாருக அதிகமாகிறது என்று சோவியத் அனுபவம் காட்டுகிறது. - நடேஸ்டா க்ருப்ஸ்கயா பாலர் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பணி மிகப் பெரியது ஆகும். கற்பிக்கும் கலே பற்றி முன்னேர்கள் எழுதிய சிறந்த நூல்கள் அனைத்தையும் அக்கறையோடு அவர் படித்தார். பாலர் கல்வி பற்றிய நூல்களையும் கற்ருர். புரட்சிக்குப் பிந்திய காலத்தில், அவர், மக்கள் கல்வி ஆணையகத்தில் தொண்டாற்றினர். பொது மக்களுடைய அறிவையும் இதயத்தையும் வளர்ப் பதையே, அவர் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண் டிருந்தார். பொதுக் கல்வியென்னும் முழு அமைப்புக்குச் சரியான அடிப்படை, பாலர் கல்வியைச் செம்மையாக அமைப்பதே என்பது அவருடைய கருத்து. பாலர் பள்ளி களின் மையப் பணி, குழந்தையின் உடல் நலத்தையும் உடற் பயிற்சியையும் கவனித்துக் கொள்வதே. எனவே, பாலர் கல்வியில், அறிவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவே, உடற் பயிற்சிக்கும் பெரும் பங்கு கொடுக்க வேண்டும். பாலர் கல்வியில் விளையாட்டிற்கு எவ்வளவு இடம் உண்டு; நர்சரி, கிண்டர் கார்டன் பள்ளிகளில், விளையாட் டுகள் முக்கியமானவை . விளையாட்டின் வழியாக, பல் வகைப் பணிகளுக்கு குழந்தை பழக்கமாகிறது. அதே நேரத்தில், பாலர் செய்யும் பணிகளை, சமுதாயத்திற்குப் பயன்படும் பணிகளாக்குவதை க்ருப்ஸ்கயா எதிர்த்தார். அவ்வெதிர்ப்பு சரியானதே. பாலர் கல்வி பெறும் குழந்தை களின் இளம் வயதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டு மென்பதை அவர் எடுத்துக் காட்டினர். குழந்தைகளிடம், தொழில் நுட்பங்களில் அக்கறையை வளர்க்க வேண்டு மென்டுர். -- குழந்தையின் ஆளுமையை இணைத்து வளர்ப்பதே. பாலர் கல்வியின் நோக்கமாகும். பாலர் பள்ளியிலேயே, கலையுணர்வை வள்ர்ப்பது, இதற்கு முக்கிய வழியாகும், 2 らいouf s で、も十ーr ごいい工