பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே, கிண்டர் கார்டன் பள்ளிகள், குழந்தைகளிடம் அழகானவற்றைப் பார்த்து ரசிக்கும் இயல்பினைப் பேன வேண்டும் துாண்ட வேண்டும்; கலையுணர்வை எடைபோ டும் ஆற்றலேயும் தூண்ட வேண்டும். குழந்தைகள் உலகத் தைப் புரிந்து கொள்ளவும் ஒழுக்கத் தன்மைகளைப் பெற வும் நன்னடக்கையில் வளரவும் ஊக்குவிப்பதை, கிண்டர் கார்டன்கள் எந்நேரமும் நினைவில் கொள்ள வேண்டும். பாலர் கல்வி பற்றி க்ருப்ஸ்கயா எழுதியது, சோவியத் பாலர் பள்ளிக் கல்விக் கோட்பாட்டிற்கு அடித்தளமா யிற்று. 'மனிதன் தனது அறிவோடு கூட இதயத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் சுற்றுச் சார்பில், ஒவ் வொருவருடைய தனி வளர்ச்சியின் மேல், ஒரு புதிய, ஆற்றல்மிக்க, சமதர்ம முறையிலான, பொது விருப்பம் உருவாகும்; அங்கே, "நான்' என்பதும் நாம் என்பதும் ஒன்முக இணைந்து விடும். ' முதல் மக்கள் கல்வி அமைச்சரான அனதோலி லுளு சார்ஸ்கியும் கல்விக் கோட்பாடுகளை உருவாக்க உதவினர். பாலர் பள்ளியில் தொண்டாற்றும் கல்வியாளர்கள், பள் ளிக்கு முந்திய வயதுக் குழந்தைகளின் இயல்புகளையும் போக்குகளையும் நன்ருகப் புரிந்து கொண்டு, தங்கள் பணி யை ஆக்கக் கண்ணுேட்டத்தோடு அணுக வேண்டுமென் னும், அவருடைய கருத்தின, நாம் முழுமையாகவே ஏற் இறுக் கொண்டாக வேண்டும். 'திட்ட வட்டமான நோக்கங்கள் தேவை. என்ன விளைவைப் பெறப் பாடுபடுகிருேம் என்பதும் துல்லியமாகத் தெரிய வேண்டும்' என்று லுனுசார்ஸ்கி எழுதினர். அவர் மேலும் கூறுவதாவது: * i =

    • 'பொற்கொல்லர் ஒருவர், செய்யும் நகையைப் பா ழாக்கி விட்டால், அதை மீண்டும் சரி செய்து கொள்ள லாம். மணிகள் கெட்டு விட்டால், அவற்றின் அசல் விலையே இழப்பு. ஆளுல் மிகப் பெரிய வைரமும் புதி தாகப் பிறந்த குழந்தையின் மதிப்பிற்குத் தாழ்ந்ததே

52