பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவருடைய ஆளுமையைப் பாழாக்குவது அறியாமல் செய்த பிழையாகவோ, பெரிய குற்றமாகவோ ஆகும். எத்தகைய ஆளுமையை நாம் உருவாக்க முயல்கி ருேம்? செழுமையாக வளர்ந்த மக்களை நாம் உருவாக்க வேண்டும். குழந்தைகளை முழுமையான ஆளுமை உட்ை பவர்களாகவும் எதிர் காலத்தின் போராட்ட வீரர்களாக வும் வளர்க்க வேண்டும்,' என்று அனதோலி லுனுசார்ஸ்கி எழுதினர். பாலர் பள்ளிக் கல்வி, கவனத்திற்குத் தகாத சிறிய விஷயம் என்று சோவியத் விஞ்ஞானிகள் கருதவில்லை. சோவியத் ஒன்றியத்தில் குழந்தைகளை சிறு மலர்கள்' என்று கனிவோடு கூறுவார்கள். இச்சிறு மலர்களின் பிரச் சினைகளின் மேல், சோவியத் ஆசிரியர்களும் கல்வி முறை வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் நாட்டம் செலுத்தினர் கள். சோவியத் சமுதாயத்தில், குழந்தைகளே மிகச் செல் லத்திற்குரிய பிரிவினர்கள் ஆவார்கள். பாலர் கல்வி முறைக்கு அடித்தளம் அமைப்பதில், சோவியத் விஞ்ஞானிகளும் ஆசிரியர்களும் கூட்டாகப் பணி புரிந்தார்கள். புரட்சியை அடுத்து வந்த சில ஆண்டு களில், சில நச்சுக் கருத்துகளையும் நஞ்சான உணர்வுகளை யும் களைந்தெடுக்க பெரும்பாடு தேவைப்பட்டது. மக் களில் பெரும்பாலோர், கீழ் மட்ட அறிவு வளர்ச்சியினை மட்டுமே பெறக் கூடியவர்கள், மிகச் சிறுபான்மையினரே, படைப்பாற்றலுடைய அறிவு ஈடுபாட்டிற்கு இயற்கை யாகத் தகுதியானவர்கள் என்பது, அத்தகைய நச்சுக் கருத்துகளில் ஒன்ருகும். மக்களை இப்படி வேறுபடுத்து வதற்கு உடல் இயல் விஞ்ஞான அடிப்படை இல்லை என் பதை சோவியத் ஆசிரியர்களும் உளவியல் வல்லுநர்களும் -- - | - - மெய்ப்பித்து விட் -(~ i. புரட்சிக்கு முன்பு, பள்ளிகளில் இருந்த குறைகளையும் அவை கையாண்ட பயனற்ற. பாட முறைகளையும் சோவி யத் ஆசிரியர்கள், ஊரறியச் செய்தார்கள். பள்ளிக் கூடக் கட்டுப்பாடுகளுக்கு அடங்கும் பழக்கத்தை வளர்க்கும் சோ.க.மு-4 53