பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணியை மட்டுமே ஜார் கால ஆசிரியர்கள், கல்விப் பல யாகக் கருதினர்கள். புதிய பாலர் கல்வித் தத்துவமே குழந்தைகளின் உள - உடற் தன்மைகளைக் க ன க் Sର , கொண்டு, அவர்களின் பொது வளர்ச்சியை வலியுறுத்: கிறது. கல்வி வளர்ப்பு பற்றிய சோவியத் தத்துவத்திற்: உயிர் நாடியான கருத்துக்கள் எவை? உடல் நலத்தோடு கூடிய ஒவ்வொரு குழந்தையின் உள வளர்ச்சிக்கான சக்தி மிகப் பெரிது. சமூகச் சுற்று: சார்பும் கல்வியும் குழந்தையின் ஆளுமையை உருவாக் வதில் முடிவான பங்கு கொள்கின்றன. இந்த முற்போக்கு மானுடப் பாச, ஜனநாயகக் கருத்துக்கள், விஞ்ஞான அடிப்படையில் தோன்றியவை. இவையே, சோவியத் கல்விக் கோட்பாட்டின் மூலைக் கற்களாகும். குழந்தையின் வயதையும் ஒவ்வொரு குழந்தையின் உடல் - உளத் தன்மைகளையும் வாழ்க்கைக்கும் ו_Jחנה6חה பள்ளிக்கும் உள்ள உறவையும், கல்வியாளரின் முக்கிய பாத்திரத்தையும் கூட்டுடைமைக்கும் கூட்டுடைமையிலும் முறையாகக் கல்வி கொடுத்து வளர்ப்பதும் எவ்வளவு முடிவான விளைவுகளையுடையது என்பதையும் கவனத்தில் கொண்டு, கிண்டர் கார்டன் பாடத் திட்டம் போடப் பட்டுள்ளது. - பாலர் பள்ளி நிலையங்கள் எவ்விதம் அமைக்கப்படு கின்றன? பள்ளிக்கு முந்திய கல்வியை இருவகை அமைப் புகளில் பெறலாம். நர்சரிகளும் பால் வாடிகளும் ஒரு வகையைச் சேர்ந் தவை. இவை, சில வார வயதுடைய குழந்தை முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளைப் பார்த்துக் கொள் ளும். இவை, குழந்தைகளின் உடல் நலன் பற்றியே பெரி தும் கவனம் செலுத்தும். நர்சரிப் பள்ளிகள், பொது மக்கள் உடல் நலத்துறையின் கண்காணிப்பில் இயங்கும். நர்சரிப் பிள்ளைகளை, வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளாக் குகிருர்கள். 54