பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) இரண்டு மாதம் முதல் ஒரு வயது முடிய: (2) ஒராண்டிலிருந்து ஈராண்டு முடிய: (3) இரண்டு வயது முதல் மூன்று வயது முடிய. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி ஆசிரியரும் ஆயா வும் இருப்பார்கள். மிகச் சிறிய வயதினருடைய ஆசி ரியை துணைத் தாதிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பிரிவுகளின் ஆசிரியைகள், செகண்டரி ஆசிரியப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, தாதிப் பணிக்கான, குறுகிய காலப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கிண்டர் கார்டன்கள் இரண்டாவது பிரிவைச் சேர்ந் அவை . மூன்று முடிந்து ஏழு முடியாத குழந்தைகளுக்காக, கிண்டர் கார்டன்கள் உள்ளன. இங்குள்ள பிள்ளைகள், வயது அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படு வார்கள். பொதுக் கல்வி ஆட்சிக் குழுக்கள், தொழிற் கூடங்கள், அரசின் நிறுவனங்கள், கூட்டுப் பண்ணைகள். அரசுப் பண்ணைகள் ஆகியவை, கிண்டர் கார்டன்களே நிறுவி, பராமரிக்கின்றன. கிண்டர் கார்டனில் குழந்தையின் தாய் மொழியின் வழியாகவே எல்லாப் பணிகளும் நடக்கின்றன. கிண்டர் கார்டன், சாதாரணமாக, ஒன்பது மணி முதல் பத்து மணி வரை வேலை செய்யும். இது, தொழிற் சாலைகளில் நிலவும் எட்டு மணி நேர வேலை நாளுக்குப் பொருத்தமாக உள்ளது. இதனுல், பெற்ருேர்கள் வேலையை முடித்து விட்டு, வீடு திரும்பும் போது குழந்தைகளை அழைத்துச் செல்லப் போதிய நேரம் கிடைக்கிறது. இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கும் கிண்டர் கார்டன் பள்ளிகளும் உள்ளன. இரவு நேர வேலையில் ஈடு பட்டுள்ள பெற்ருேர்களுக்கு உதவியாக இவை உள்ளன. ஒன்பது அல்லது பத்து மணி நேரம் தங்கும் குழந் தைகளுக்குப் பள்ளியில் மூன்று வேளைச் சாப்பாடு உண்டு. அதற்கு மேலும் தங்க வேண்டியவர்களுக்கு, நான்கு வேளை a - உணவு உண்டு. 55