பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலின் தேவைகளான போதிய ஒய்வு, விளையாட்டு நேரங்கள், செயல்பாடுகளில் மாற்றம் முதலியவற்றைக் கொடுக்கும் முறையில், பாலர் பள்ளிகளின் வேலை நடக் கிறது. நாள் தோறும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கம், தேவையான சுகாதாரப் பழக்கங்களையும் பண்பாட்டையும் வளர்க்கத் துணையாகிறது. குழந்தைகளின் உடல் நலத்திற்கும் உடல் வளர்ச் சிக்கும் இன்றியமையாத, நடுப்பகல் துக்கம் உட்பட, போதிய ஒய்வு, இரவுத் துக்கம், சமப்படுத்தப்பட்ட சத்தான உணவு ஆகியவை நர்சரிகளிலும் கிண்டர் கார் டன்களிலும் கொடுக்கப்படுகின்றன. குழந்தை மருத்துவர் ஒருவரும் எப்போதும் இருப்பார். பிறர் உதவியின்றி, தானே உண்பதற்கு, இண்டர் கார்டன் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கிரு.ர்கள். தானே கைகால்களைக் கழுவிக் கொள்ளவும் உடை போட்டுக் கொள்ளவும் பழகிக் கொள்ளுகிறது. தன்னுடைய பொருள் களைத் துப்புரவாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்ளப் பயிற்சி பெறுகிறது. தன் படுக்கையைப் போட்டுக் கொள் ளவும் பொம்மைகளைப் பாதுகாக்கவும் தெரிந்து கொள்ளு கிறது. குழந்தையிடம், நல்ல பழக்க வழக்கங்களை வளர்க் கும் பொருட்டு இவை இடம் பெறுகின்றன. நாளேக்கு மூன்று அல்லது நான்கு மணிகள், திறந்த வெளியில், விளையாட்டுகளில் கழிகின்றன. அவ்வமயம் குழந்தைகள், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நட் பின் மதிப்பை உணரவும் சேர்ந்து விளையாடுவதின் சிறப்பை அறியவும் ஆசிரியர்கள் உதவி செய்கிரு.ர்கள். பாட நேரங் களில், சரியான உச்சரிப்பு, எண்மானம், படம் வரைதல், கட்டைகளைக் கொண்டு பலவற்றைக் கட்டுதல், பாடுதல், பண்ணுக்கேற்ப இயங்குதல், பொதுவாகத் தன்னைச் சுற் றியுள்ள உலகத்தைத் தெரிந்து கொள்ளல் ஆகியவற்றை கற்றுக் கொள்ளுகிரு.ர்கள். கிண்டர் கார்டன் பிள்ளைகளுக்கு, 'பள்ளிக்கூடம் போக வேண்டுமென்னும் விருப்பம் எளிதாக ஏற்படுகிறது; 56