பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்குழந்தைகள் கவர்ச்சியானவைகளை மட்டுமல்லாது தேவையானவைகளையும் கற்றுக் கொள்கின்றன. --- குழந்தைக் கல்வியும் வளர்ப்பும் தனி ஆள் அடிப் படையில் நடக்கிறது. இரண்டு வயதுக் குழந்தைகள், விளையாட்டுகளிலும் பிற செயல்களிலும் ஈடுபடும் போது, அவ்வயதினரை, சிறுச் சிறு குழுக்களாகப் பிரித்து விடு வார்கள். மூத்த பிள்ளைகளின் முயற்சிகள் முழுக் குழு அடிப்படையில் நிகழும். - பாலர் கல்வி நிலையங்களுக்குச் சென்றவர்கள், சாதா ரனப் பள்ளியில், முதல் வகுப்பில் சேரும்போது சரா சரி அறிவிலும், உடலிலும் மற்றவர்களைக் காட்டிலும், அதிகம் வளர்ந்தவர்களாக இருக்கிருர்கள் என்பதை மதிப் பீடுகள் காட்டுகின்றன. கிண்டர் கார்டன் கல்வியின் நோக்கங்கள் வருமாறு: (1) குழந்தையின் உடல் நலத்தையும் வளர்ச்சியை யும் கவனித்தல்; o (2) விரும்பத்தக்க நன்னடத்தைக்குக் கடைக்கால் போடுதல்: குழு அடிப்படையில் விளையாடல், வேலை செய்தல், ஒருவருக்கொருவர் உதவுதல், ஆகியவற்ருல் பொதுமை உணர்ச்சியும் அரும்புகிறது: பெற்ருே.ரிடமும் மூத்தோ ரிடமும் மரியாதை, தாய் நாட்டுப்பற்று; இவை அனைத் தும் நன்னடத்தைக் கூறுகளாகும்: (3) பின்னஞ்சிறு பணிகளில் ஆசிரியர்களுக்கு உதவு வதால், செடிகளையும் விருப்பமான பட்சிகளையும் மிருகங் களேயும் பராமரிப்பதால், வேலைத் திறன்களின் தொடக் கத்தைப் பெறுதல்: (1) அறிவு, புலன்களின் வளர்ச்சி: W - (5) தாய் மொழியில் சரியான உச்சரிப்போடு தெளி வாகப் பேசுதல்; (6) இரசிகத் தன்மையை வளர்த்தல்: (7) முறையான கல்விக்கு ஆயத்தப் படுத்தல். -* 57