பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் உடல், அறிவு வளர்ச்சிக்கும் அவம் றின் சீரிய இயல்புகள் உருவாவதற்கும் நர்சரிகளும் கிண் டர் கார்டன்களும் ஆற்றி வரும் பணி, மெய்யாகவே, மகத் தானது. இவற்றின் செல்வாக்கு, தாய்மார்களின் வாழ்க் கையையும் மாற்றியமைக்கிறது. எண்ணற்ற பாலர் பள்ளி கள் இருப்பதால், குழந்தை பராமரிப்புக்கான பல்வேறு அன்ருட உளேச்சல்களிலிருந்து, தாய்மார்கள் விடுவிக்கப் படுகிரு.ர்கள். அதனுல், தாய்மார்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட முடிகிறது. குழந்தையிடம், வீட்டு வேலைகளை மட்டுமே செய்யும் தாயின் செல்வாக்கை விட, தொழில் புரியும் தாயின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. பாலர் பள்ளியில் குழந்தையொன்றுக்கு மாதமொன் றிற்கு 40 ரூபிள்களை அரசு செலவு செய்கிறது. ஆல்ை பெற்ருேர் கட்ட வேண்டிய தொகை, மாதத்திற்கு ஆறு முதல் பன்னிரண்டு ரூபிள்களுக்குள் அடங்கும். இப்பள்ளி களில் கொடுக்கும் உணவுக்குக் கூட இத்தொகை போ தாது. ஆயினும் பல குழந்தைகளையுடைய தாய்மார்கள். இதுவும் கட்டத் தேவையில்லை. பாலர் பள்ளிகளால் ஏற்படும் கல்வி நலன்களும் எதார்த்த வாழ்க்கைக்குக் கிடைக்கும் உதவியும் சேர்ந்து, நர்சரி, கிண்டர் கார்டன்களில் இடத்திற்குக் கிராக்கியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலைக் கல்விக்கான வசதிகளை, சோவியத் ஆட்சி தொடர்ந்து பெருமளவு வளர்த்து வரு கிறது. 1976 இல் கோடியே 15 இலட்சம் பேர்கள் நர் சரிகளுக்கும் கிண்டர் கார்டன்களுக்கும் போய்க் கொண் டிருந்தார்கள். மேலும் 30 இலட்சம் குழந்தைகள், நாட் டுப்புறங்களில் ஒவ்வோர் ஆண்டும் அறுவடைக் காலங் களில் தோன்றும் பருவகால பாலர் பள்ளிகளுக்குச் செல் லுகிருர்கள். ஆண்டுக்கு ஆண்டு, பாலர் பள்ளிகளுக்கு அதிக இட வசதி செய்ய நிதி ஒதுக்குகிருர்கள். 1980 ஆம் ஆண்டிற்குள் கிண்டர் கார்டன்களில், 28 இலட்சம் இடங் களை அதிகப்படுத்க. இப்போதைய திட்டம் ஏற்பாடு செய்துள்ளது. 58