பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் சோவியத் ஒன்றியம். இது. படித்தவர் அனைவரும் அறிந்த பெயர். இந்நில உலகில் மிகப் பெரிய நாடு, சோவியத் சமதர்மக் குடியரசுகளின் ஒன்றியம் - சோ.ச.கு. ஒ - ஆகும். இதன் பரப்பு எவ்வளவு? இதன் பரப்பு, 2 கோடி 24 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இவ்வளவு பெரிய பரப்பு, உலக அளவில் ஆறில் ஒரு பங்காக உள்ளது. சோவியத் ஒன்றியம் ஒரே கண்டத்தில் அடங்கியுள்ளதா? இல்லை; இரு கண்டங்களில் விரிந் துள்ள்து. இது ஐரோப்பாவில் பாதியளவும் ஆசியாவில் மூன்றிலொரு பாகத்திற்கும் பரவியுள்ளது. சம ஆட்சியுரிமையுடைய, பதினைந்து குடியரசுகளின் விருப்ப பூர்வமான ஒன்றிப்பே, இரு கண்டங்களிலும் வியாபித்துள்ள, சோவியத் ஒன்றிய அரசாகும். இது நூற்றுக்கு மேற்பட்ட, தேசிய இனங்களைத் த ன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வினங்களில், பெரியனவும் சிறியன வும் உள்ளன. இரஷ்ஷியர்கள், மொத்த மக்கள் எண் ணிக்கையில், நூற்றுக்கு ஐம்பத்து மூன்று விழுக்காட்டின பக உள்ளார்கள். உக்ரேனியர்கள். நூற்றுக்குப் பதி னேழு விழுக்காட்டில் இருக்கிருர்கள். கோடிக் கணக்கில் உள்ள இப்பெரிய இனங்களோடு, ஆயிரம் மக்களே உள்ள ஒரோச்சி. ஞானசானி முதலிய சின்னஞ்சிறு இனங்களும் இருக்கின்றன. அனைவரும் அமைதியோடும் நட்போடும் வாழ்கிருiர்கள். i மொத்தத்தில், 1973 ஆம் ஆண்டின் மையத்தில், சோவியத் நாட்டின் ம்க்கள் எண்ணிக்கை 25 கோடியாக இருந்தது. மக்கள் எண்ணிக்கையின் அடிப் படையில் பார்க்கும்போது, சீனுவிற்கும் இந்தியாவிற்கும் அடுத்த, மூன்ரும் இட்த்தை சோவியத் ஒன்றியம் பெற் முள்ளது.