பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுவான உயர்நிலைப் பள்ளிப் படிப்பு வெகுவாகப் பரவியுள்ள பாலர் கல்வி, மாளுக்கர் களை அடுத்த நிலைக் கல்விக்கு ஆயத்தப்படுத்துகிறது. இந் நிலையில் மூன்று வகைப் பள்ளிகள் அடங்கியுள்ளன. முதல் மூன்று படிவங்களை மட்டும் உ டப 1ெ, தொடக்கப் பள்ளிகள். இவை ஒரு வகை. முதல் படிவம் முதல் எட்டாம் படிவம் வரை உள் ளவை, முழுமை பெருத உயர்நிலைப் பள்ளிகள். இவை இரண்டாம் வகை. மூன்ரும் வகையில், முதல் படிவம் முதல் பத்தாம் படிவம் வரை உள்ள பொதுவான உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் சேரும். இம்மூன்று வகைப் பள்ளிகளும் ஒன்றிணைந்த ஒரே பாடத் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. எனவே ஒரு வகைப் பள்ளியிலிருந்து மற்ருெரு வகைப் பள்ளிக்கு மாறு வதில் எத்தகைய சிக்கலும் இல்லை. தொடக்கப் பள்ளியில் ஆலுைம் முழுமை பெருத அல்லது பெற்ற பொதுவான உயர்நிலைப் பள்ளியில் ஆளு) ஆம், முறையான கல்வி, ஏழாவது வயது நிரம்பியதும் தொடங்குகிறது. முதல் படிவம் முதல் மிக உயர்ந்த பல்கலைக் கழக அல்லது அதற்கு இணையான படிப்பு வரை, கல்வி இலவசம். பல்லாண்டுகளாக, எல்லாக் குழந்தைகளுக்கும் எட் டாம் படிவம் வரை, கல்வி கட்டாயமாக இருந்தது. இப் போது பத்தாவது வரை கட்டாயம் நீளுகிறது. 60