பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் இசைக்கும் தனித்தனியே கொடுக்கிருர்கள். வாரத் திற்கு இரு பிரீயட்டுகள் உடற் பயிற்சிக்கு, அத்தனை கை வேலைக்கும். நான்காம் படிவத்தில், இயற்கை விஞ்ஞா னத்தில் இரு பாடங்களும் வரலாற்றில் இரு பாடங்களும் தி டக கும. - சோவியத் ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், மானக் கர்களின் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்க்கின்றன; எப்படிக் கற்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கின்றன. மாளுக்கர் ஒழுக்கத்திலும் உள்ளுணர்விலும் வளரத் துணை நிற்கிறது. குழந்தை, கற்றுக் கொள்ளும் உயிர் மட்டு மல்ல; செயல்படும் பொறியுமாகும். குழந்தையின் எல் லாக் கூறுகளையும் முழுமையாக வளர்க்க முயலும் எந்த நல்ல கல்வி முறையும், மானக்கரிடம் நல்ல தொழிற் பழக்கங்களையும், உழைப்பைப் பற்றிய சரியான போக்கை யும் வளர்ப்பதற்குப் போதுமான வாய்ப்புகளைத் தர வேண்டும். சோஷலிச சமுதாயத்தில் உழைப்பு கடமை மட்டுமல்ல, ஒவ்வொருவருடைய மதிப்பும் அதில் அடங் கியுள்ளது. முதல் படிவத்திலிருந்தே, வேலையைப் பற்றிப் படைப்புப் போக்கினை பதிய வைப்பதன் முக்கியத்து வத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது. பிற்காலத்தில் சமுதாயத்தின் நலனுக்காக நன்ருக உழைப்பதற்காக, இப்போது கற்க வேண்டுமென்று, ஒவ்வொரு மாணவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உழைப்பினல் தான் மக் களுக்கு தேவையானவை கிடைக்கின்றன: சமுதாயத் திற்குப் பயன்படும் எல்லா வேலைகளும் பெருமைக்குரியன: ஆகவே, வேலையில் கணங்குவது அவமானம். இவ்வுண் மையை ஒவ்வொரு மாணவருக்கும் புலப்படுத்த வேண் டும். இது எல்லா வேலைகளுக்கும்-பாடங் கற்றலுக்கும்பொருந்தும். எனவே, தொடக்கப் பள்ளிக்கூட பாடத் திட்டத்தில் மாளுக்கர் செய்ய வேண்டிய பல பணிகளும் - - * - s * சேர்ந்துள்ளன. வகுப்பறைத் துப்புரவு, சுகாதாரப் பணி, செடித் தொட்டிகளில் நீர் ஊற்றல் முதலியவை சிலவா கும். மூன்ரும் படிவத்திலிருந்து, பள்ளிக்கூட உணவுக் கூடத்திலும் தோட்டத்திலும் பணிப்பயிற்சி பெறுகிரு.ர்கள். 64