பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை, நல்ல நூல்கள், இசை, படக்கலை ஆகிய ற்றை இரசிக்க, தொடக்க வகுப்புகளில் கற்றுக் கொள் ಧ್ಧಿ மேலும் ஒழுங்கு, சீர்மை, மரியாதை தெரு விலும், நான்கு பேர் நடுவிலும் சரியாக நடந்து கொள்ளு தல் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளுகிருர்கள். எட்டா வது படித்து முடித்தவர்கள் முழுப் பொருளில் எழுத் தறிவு பெற்றவர்கள் ஆகும் வகையில் பாடத் திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. புற உலகை இயக்கும் விஞ் ஞான விதிகளும் சமுதாயப் பரிளுமமும் பற்றிய அறிவு மாணவர்களின் அறிவின் இன்றியமையாத பகுதியாக இருக்க வேண்டும். தொடக்க வகுப்புகளுக்கு மேற்பட்ட படிவங்களில் இயற்கை பற்றியும் சமுதாய இயல் பற்றியும் படிக்கிருர் கள்; தொழில் நுட்பக் கல்வி தொடங்குகிறது. கைவேலே , உடற் பயிற்சி, சித்திரக் கலை ஆகியவற்ருேடு லோகாயுத கண்ணுேட்டத்தின் மூலாதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன. தொடக்கக் கல்விக்கு மேற்பட்ட நிலைக்கான பாடத் திட்டத்தில், தாய்மொழி, இலக்கியம், இரஷ்ஷிய மொழி யும் இலக்கியமும், பெளதீகம், கணிதம், வேதியல், உயி ரியல், வரலாறு, பூகோளம், அயல்மொழி, படம் வரை தல், வரை படம் எழுதுதல், பாடுதல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஐந்தாம் ஆண்டிலிருந்து அயல் மொழி யைக் கற்பிக்கிருர்கள். உலகிலுள்ள பல்வேறு நாடுகளைப் பற்றிய பொது அறிவைப் பெறவும் சமுதாய உணர்வை வளர்க்கவும் நாட்டின் ஆட்சியிலும் சமுதாய வாழ்விலும் செயல்படு வதற்கு ஆயத்தம் செய்யவும் ஆன் வகையில், எட்டாண்டு பள்ளிகளின் மானிட இயல் பாடங்கள் அமைந்துள்ளன. வரலாற்றுப் பாடத் திட்டம், வரலாற்று இயக்கத் தைக் கோடிட்டுக் காட்டுவதிலும் பொது மக்களின் முடி வான பங்கினைச் சுட்டிக் காட்டுவதிலும் நாட்டம் செலுத் தும். அதோடு, சமுதாயப் பொருளியல் அமைப்புகளில் 65