பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'_*வரும் காட்டும் அக்கறை, அவர்களுடைய வாழ்க்கை முறையோடு இணைந்து விட்டது. - - த் மக்கள் தங்கள் பள்ளிகளிடமும் ஆசிரியர் கள் கல்வியாளரிடமும் காட்டும் அக்கறையும் மதிப்பும் வெளி நாட்டுத் கல்வியாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து சோவியத் ஒன்றியத்திற்கு வந்த ஆசிரியர் குழுவில் ஒருவராகிய, லாரென்ஸ்.ஜி. டெர்திக் என்பவர், நாட்டு முன்னேற்றத்திற்கு வழி யாக, கல்வியின்பால், சோவியத் நாடு முழுவதும் வெளிப் படும் ஈடு: ாட்டின் அளவையை நாங்கள் எதிர் பார்க் கவே இல்லை. எங்கு சென்ருலும் கல்வியின்பால் உள்ள முழு ஈடுபாட்டிற்கு சான்றின் மேல் சான்றுகளையே கண் டோம். இதல்ை, நாங்கள் பெற்ற உணர்ச்சிகளில் பெரி தானது, வியப்பே, என்று எழுதினர். - இந்றுலா சிரியரும் சோவியத் ஒன்றியத்திற்குச் சென்ற போதெல்லாம், 'கல்விக்காக எல்லாம்”, என்னும் சிேமு ஈடுபாட்டினை உணர நேர்ந்தது. சோவியத் கல்வி எவ்வளவு நன்ருக இருக்கிறது என் லும் கேள்வியே பலருடைய எண்ணத்தில் முன்னே பிறக் கும். பிரிட்டானியா கலைக் களஞ்சியத்தின் ஆசிரியர்க் குழுத் தலைவரும் வெளியீட்டாளருமான வில்லியம் பென் டன், இதற்குப் பதில் சொல்லட்டும். - சோவியத் நாட்டைச் சுற்றிப் பார்த்த வில்லியம் பென்டன், சோவியத் ஒன்றியத்தில் கற்பிப்போரும் கற் போரும் என்னும் தலைப்பில் கொடுத்த தனி அறிக்கையில் பின் வருமாறு கூறுகிருர்: "ஆம், அது நன்ருயிருக்கிறது;-உண்மையில் மிக நன்ருயிருக்கிறது. மேலும் நன்ருகிக் கொண்டிருக்கிறது என்றே நான் பதில் கூறுவேன். சோவியத் கல்வித் துறை யில் பெற்றுள்ள முன்னேற்றம், அமெரிக்கக் கனவிற்கு அறை கூவல் விடுகிறது. அக்கணவாவது, ஒவ்வொரு பையனும் பெண்ணும் தனது திறமைக்கேற்ற மிக உயர்ந்த 68.