பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மட்டக் கல்வியைப் பெறுவதற்கு சம வாய்ப்புப் பெறுதல் என்பதாகும். - 'சோவியத் பள்ளிகளில் பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெறுபவர்கள், அமெரிக்காவில் பன்னிரண்டு ஆண்டுப் படிப்பின் முடிவில் அடையும் பாட அறிவு நிலையையாகிலும் பெறுகிருர்கள். அதிலும் அதிக அறிவு நிலையை அடைவதும் உண்டு. சொல்லிக் கொடுக்கும் பாடம் அடிக்கடி கடினமானதாகவே இருக்கும். ஆயினும் உயர் தரத்தைப் பெறும் வகையில் ஆழ்ந்தும் விரைந்தும் சோவியத் பள்ளிகள் இயங்குகின்றன.' இந்த உயர்ந்த தரத்தை உருவாக்கும் பல காரணங் களைக் காட்டலாம். இப்போதைக்கு, உள்ளுர், பிராந் திய தேசிய வழக்காறுக்ளிலும் போராட். ங்களிலும் கிளர்ச்சிகளிலும் சோவியத் மாணவர்கள் தள்ளப்படுவ தில்லை என்பதை மட்டுமே குறிக்க விரும்புகிறேன். படி யுங்கள், படியுங்கள், மேலும் படியுங்கள்', என்று லெனின் இளைஞர்களுக்குக் கொடுத்த அறிவுரையை எழுத்திலும் உணர்விலும் உண்மையாகப் பின்பற்றி வருவது சோவி யத் சமுதாயமாகும். சமுதாயம், கவனச் சிதைவை ஏற்படுத்துவதில்லை ; எனவே படிப்பில் ஈடுபாடு பெருகுகிறது, மாணவர்களின் அக்கறை நெடுநாள் நிலைக்க இது துணையாகின்றது. சோ.க.மு-5 о 69 .