பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிற் கல்வியும் சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் இளைஞர்களின் கல்வியில், தொழிற் பள்ளிகளும் சிறப்புப் பயிற்சி கொடுக்கும் உயர்நிலைப் பள்ளிகளும் முக கிய பங்கு கொள்கின்றன. இன்று, சோவியத் ஒன்றியம் தொழில் மயமாகியுள்ளது. தொழில்கள், விஞ்ஞா னத தையும் தொழில் முட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு நடப்பதுபோல் பயிர்த் தொழிலும் விஞ்ஞான அடிப்படையில் இயந்திரங்களின் உதவியால் நடக்கிறது. இடையருது முன்னேறி வரும் சோவியத் நாட்டின் பொருளியலில், பல பிரிவுகளுக்கும் இடையருது துட்பத் தொழிலாளர்கள் தேவைப்படுகிருர்கள். தொழில் நுட் பமும் உழவு நுட்பமும் தேங்கிக் கிடக்கவில்லை. அவை, அப்போதைக்கப்போது, மாறிக் கொண்டே இருக்கின் றன. எனவே, இவ்வேலைகளில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு மறு பயிற்சி தேவையா கிறது. பல வகையான தொழிற் பள்ளிகள் இக்கடமையை ஆற்றுகின்றன. சோவியத் ஒன்றியத்தில் 5, 700 தொழிற் பள்ளிகள் உள்ளன. அவற்றில், கிட்டத் தட்ட 22 இலட்சம் இளைஞர்கள் பயிற்சி பெறுகிருர்கள். தொழிற்சாலை, கட்ட டத் தொழில் வேளாண்மை, செய்திப் போக்குவரத்து, சமுதாயச் சேவைகள் ஆகியவற்றிற்குத் தேவைப்படும் 1, 100 திறன்களே இப்பள்ளிகள் கற்றுக் கொடுக்கின்றன. தொழிற் பள்ளியில் சேர்வதற்கு என்ன தகுதி தேவை? எட்டாண்டு பொதுக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருத்தல் சேர்வதற்குத் தகுதி ஆகும். இதற்கு, நுழைவுத் தேர்வு கள் இல்லை. விருப்பமுடைய எல்லோரும் சேரலாம். சம்பளமோ தனிக் கட்டணமோ கட்டவேண்டியதில்லை. 70