பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிற் பள்ளி மாளுக்கர்க்ளுக்கு இலவச சீருடை. இலவசத் தொழில் உடை, இலவச உணவு ஆகியவற்றை வழங்குகிருர்கள். வெளியூர் மாளுக்கர்களுக்கு இலவச உறையுள் வசதி உண்டு. தொழிற் பள்ளி ஆசிரியர்களில் நூற்றுக்கு எண்பத்தைந்து விழுக்காட்டினர், உயர் கல் வியோ சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிக் கல்வியோ ப்ெற்றவர்கள் ஆவார்கள். தொழிற் பள்ளிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை யாவன: (1) மூன்று முதல் நான்காண்டு வரை பயிற்சி கொடுக் கும் பள்ளிகள். (2) ஈராண்டு பயிற்சி கொடுக்கும் பள்ளிகள். (3) ஒராண்டு முதல் பதினெட்டு மாதங்கள் வரை பயிற்சி கொடுக்கும் பள்ளிகள். முதல் வகைப் பள்ளிகளில் பயில்வோர். தொழிற் பயிற்சியோடு, முழுமையான உயர்நிலைப் பள்ளிப் படிப் பையும் பெறுகிருர்கள். இப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற வர்கள், நேரே வேலைக்கும் உயர் படிப்பிற்கும் போகத் தகுதி பெற்றவர்கள். இரண்டாம் வகைப் பள்ளிகளே மிக அதிகம். மூன்ரும் வகைப் பள்ளிகள், பத்தாண்டு பொதுக் கல்வி யில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளும்; 250 வகை தனித் திறன்களில் பயிற்சி கொடுக்கும். - வேலைப் பயிற்சி பெறும் போதே ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் தொழிற் கல்வி நடக்கிறது. இத்தொழிற் பள்ளிகளில், எதிர்காலத் தொழி லாளர்கள், ஒரு தொழிற் திறனைப் பெறுவதோடு, தன் தொழிலை எப்படி திட்டமிட்டு நிறுவுவது என்பதையும் அதிக திறமான வழியில் உற்பத்தி வேலையைச் செய்வதையும் கற்றுக் கொள்ளுகிருர்கள். தக்க வசதிகளையுடைய தொழிற் பள்ளிகளில் மட்டுமே, சம்மந்தப்பட்ட தொழிற் பயிற்சியைக் கொடுப்பதால் இது சாத்தியமாகிறது. இப் பள்ளிகள், பெருந் தொழிற் கூடங்கள், கூட்டுப் பண்ணைகள், அரசுப் பண்ணை கள், ஆகியவற்ருேடு இணைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, 71