பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்குள்ள பொருத்தமான கருவிகளை, பொருள்களே, ஆசிரியர்களை, இட வசதியை, பயிற்சி பெறுவோர் பயன் படுத்திக் கொண்டு தொழில்களை செய்து பார்க்க முடிகிறது. தொழிற் பள்ளிகளில் பயில்வோரும் ஒரளவு பொதுக் கல்வி பெறுகிருர்கள். இரசனையை ஒரு பாடமாக, எல் லாத் தொழிற் பள்ளிகளும் கற்பிக்கின்றன. புற பாட நடவடிக்கைகளுக்கும் வசதிகள் உண்டு. பயில்வோரின் தொழில் அக்கறையை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளுக் கும் அரசியல் விழிப்பு, அறிவு, ஆற்றல், இயல்பூக்கம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் நன்மையான பொழுது போக்குகளுக்கும் வசதி செய்துள்ளன. வருங்காலத் தொழிலாளர்கள், விளையாட்டுப் பந்தயங்களுக்கு கணிச மான நேரத்தைச் செலவிடுகிரு.ர்கள். தொழிற் பள்ளி களில் மிகப் பெரும்பாலானவைகளுக்கு விளையாட்டு அரங் கமும் விளையாட்டுத் திடல்களும் உண்டு. இன்று, விளை யாட்டுப் பந்தயங்களில் உலக வெற்றி வீரர்களாகவும் அவ் விளையாட்டுகளில் வல்லுநர்களாகவும் விளங்கும் நூற்றுக்கணக்கான, முன்னணி சோவியத் விளையாட்டக் காரர்கள், தங்கள் விளையாட்டு வாழ்க்கையை தொழிற் பள்ளிகளில் தொடங்கியவர்கள் ஆவார்கள். தொழிற் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைக்கு அலைய வேண்டியதில்லை. தொழிற் பள்ளியில் என்ன வேலைக்குப் பயிற்சி பெற்ருர்களோ அதே வேலைக்குச் சட்டம் உறுதியளிக்கிறது. நாட்டின் பொருளியல் வளர்ந்து கொண்டே இருப்பதால், எல்லா இடங்களிலும் ஆட்கள் தேவை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பெரும் பாலும், பயிற்சி பெற்ற தொழிற் சாலையிலேயே, பயிற்சி முடிந்ததும், வேலை கிடைக்கும். தொழிற் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற வர்கள். தங்கள் பொதுக் கல்வி அல்லது தொழிற் கல்வி யில் மேலும் உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டா? ஆம்; ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இவர்கள், அஞ்சல் வழியாகவோ மாலைப் படிப்பின் மூலமோ, சிறப்புப் பயிற்சி அளிக்கும் உயர்நிலைப் பள்ளியிலோ உயர் கல்விக் கழகத் 72