பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலோ, கல்வியில் தொடர்ந்து முன்னேற, சட்டம் இடங் கொடுக்கிறது. பாட்டாளிகள் அடைந்துள்ள பல்வேறு மட்டக் கல்விக்கு ஏற்ப, அநேக பாடத் திட்டங்கள் நடப் பதால், சட்டத்திலுள்ள மேற்படி உரிமையை நடைமுறை யிலும் காண முடிகிறது. கல்வியின் உச்சி மட்டம் வரை, முழு நேரம் பயிலும் மாணுக்கர்களுக்குக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருப்பது போன்றே, பகுதிநேர அஞ்சல் வழி மாளுக்கர்களுக்கும் திறந்துள்ளன. கல்விக் கதவுகளைத் திறந்திருப்பதோடு பல்வேறு வகை ஊக்கங்களும் உதவி களும் அளிக்கிருர்கள். பயணச் சலுகை, அதிகப்படி விடுப்பு வசதி போன்றவற்றை ஏராளமான பாட்டாளிகள் பெறு கிருர்கள். ஆண்டுக்கு ஆண்டு, உயர் கல்வி நெடுஞ்சாலையில் இப்பாட்டாளிகள் வீறு நடை போட்டு முன்னேறுகிருர்கள். சோவியத் மாணவர், எட்டாவது முடித்ததும் கல் வியைத் தொடர்வதற்கு மற்ருெரு வாய்ப்பு உண்டு. சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளியில், அம்மாளுக்கர் சேரலாம்._ இத்தகைய பள்ளிகளில், தொழில் நுட்பத் துறைகளில், வேளாண்மையில், வன இயலில், மருத்துவத் தில், பொது ஊழியத்தில், கிண்டர் கார்டன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியில், ஒரளவு தொழில் வல்லமைப் பயிற்சி கிடைக்கும். தொழிற் பள்ளிகள், நுட்பத் தொழி லாளரை ஆயத்தம் செய்கின்றன. உயர் கல்விக் கழகங் கள், தொழில் வல்லாரைத் தயாரிக்கின்றன. சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிக் கூடங்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட தகுதிகளையுடையவர்களை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுகின்றன. சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளியில் பெறும் பயிற் சியின் காலம், சாதாரணமாக, நான்கு ஆண்டுகள் ஆகும். நான்காண்டு பயிற்சிக்கு வருவோர்க்கு, மற்ற உயர்நிலைப் பள்ளிகளின் பாடத் திட்டத்தை ஒட்டிய பொதுக் கல்வி அளிப்பதோடு குறிப்பிட்ட தொழில் நுட்பத்தில் பயிற்சி கொடுக்கிருர்கள். இப்பயிற்சியின் போக்கு, வேலைக்கு வேலை மாறுபடும். ஆளுல் அநேகமாக குறிப்பிட்ட ஒரு வேலைக்கு, நாடு முழுவதும் ஒரே மாதிரி பயிற்சியே இருக் "73