பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும். சிறப்புப் பயிற்சி நேரத்தில் பாதியை, பள்ளிக்கூடத் தொழிற் கூடத்திலோ, ஆய்வுக் கூடங்களிலோ, தொழிற் சாலைகளிலோ, பண்ணைகளிலோ, அலுவலகங்களிலோ, நேரடிப் பயிற்சியில் செலவிடுகிருர்கள். பள்ளிகளில் உள்ள தொழிற் கூடங்கள் மாளுக்கருக்குப் பயிற்சி கொடுப்ப தோடு, உற்பத்திச் சாலைகளாகவும் செயல்படுகின்றன பத்தாண்டுப் படிப்பை முடித்தவர்கள், பதினெட்டு மாதம் முதல் இருபத்து நான்கு மாதங்களில் முடிக்கக் கூடிய, குறுகிய பயிற்சிகளை மேற்கொள்வதும் உண்டு. அவர்களுக்கு, எடுத்துக் கொண்ட நுட்பத்தில் பயிற்சி மட்டும் கிடைக்கும்; பொதுக் கல்வி இராது. பயிற்சி முடிந்ததும், அரசுத் தேர்வு நடக்கும். பொதுக் கல்விக்கும் தொழிற் பயிற்சிக்கும் தேர்வுகள் உண்டு. சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிகளில் பயில்வோர். கடைசி ஆண்டில், தேர்ந்தெடுத்துள்ள தொழில் துட்பத் திற்கு ஏற்ற திட்டமொன்றை எடுத்துக் கொள்ள வேண் டும். இதில் பெறும் மதிப்பெண், கடைசித் தேர்வுக்கு கணக்கிடப்படும். தொழிற் பள்ளிகளிலும் சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள், மூன்ருண்டு வேலை யில் இருந்த பிறகு, உயர் கல்விக் கழகத்தில் சேரலாம். முன்னரே குறிப்பிட்டது போல, உயர் கல்வியை பகுதி நேரப் படிப்பின் மூலமோ, அஞ்சல் வழியோ, பெற வாய்ப்புகள் உண்டு. தொழிற் பள்ளித் தேர்வுகளிலும் சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளித் தேர்வுகளிலும் சிறப்பாக த் தேர்ச்சி பெறுவோர்க்கு, மூன்ருண்டு வேலைசெய்த பிறகு கல்வியைத் தொடரலாம் என்னும் கட்டுப்பாடு இல்லை. சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் எல்லார்க் கும் இலவசம். மானக்கருக்கு உதவித் தொகையும் உண்டு. சிறப்புப் பயிற்சி உயர்நிலைப் பள்ளிகள், மாலைப் பிரிவுகளையும் அஞ்சல் பிரிவுகளையும் கொண்டுள்ளன. மூன்று முறைக்கும் கல்வியின் தரமும் தேர்வின் தரமும் ஒன்ருகவே உள்ளன. 74